பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


படி அரிசித்திட்டம் போட்டு அவர்கள் சாதிக்க முடியாததை நாம் சரதித்திருக்கிறோம்.

நான் டில்லிக்குச் சென்றிருந்த சமயம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அமர்ந்திருந்த போது காங்கிரஸ்காரர்களெல்லாம் வந்து, நீ நல்ல காரியம் செய்தாய்-நல்ல காரியம் செய்தாய் என்றார்கள். என்ன காரியம் என்றேன். ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுகிறீர்களே அதைத்தான் கூறுகிறோம் என்றார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன், "ஆமாம் அந்த நல்ல காரியத்தை நான் செய்து விட்டேன். அதற்குத் தான் இங்கே உதவி கேட்க வந்திருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர்கள் 'எங்களால் ஒன்றும் முடியாது உன் சொல்வாக்குத் தான் செல்வாக்காய் இருக்கிறது, நீயே கேள் என்றனர். நான் கேட்டு இல்லையென்ற பதிலோடு திரும்பி வந்ததை நீங்கள் பத்திரிகை வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

ரூபாய்க்கு 1 படி அரிசி போடுவதை எல்லாரும் பாராட்டுகிறார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் மட்டும் தான் கேலி பேசுகிறார்கள். மக்களோடு மக்களாக அவர்கள் ஒன்றிப் பழகாத காரணமாகவும் அது இருக்கலாம்.

விலைவாசியை இவன் நோக்கத்திற்குக் குறைத்து விட்டு இவன் டில்லிக்குப் போகிறானே; இது நியாயமா? ஆகுமா? அடுக்குமா என்று கூறுகிறார்கள்.

குழந்தை பாலுக்கழுதால் தாயிடத்தில் போகுமா? அடுத்தவீட்டுக்காரியிடம் போகுமா?

டில்லியைக் கேட்காமல்

டில்லிக்குப் போகாமல் வேறு எங்கே போவது? இலண்டனுக்கா போவது ? அமெரிக்க நாட்டிலுள்ள வாஷிங்டனுக்கா