பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


போவது ? இல்லை மாஸ்கோவுக்குப் போவதா? டல்லாஸ் நகரம் போவதா?

உன்னால் உதவி செய்ய முடியவில்லையென்றால் வெளிநாடுகளிடமிருந்து வாங்குகின்ற உரிமையை எங்களிடம் கொடுத்து விடு. முடிந்தால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். அப்பொழுது முடியாமல் உன்னிடத்தில் ஓரணாவிற்காக வந்தாலும் ஏன் வந்தாய் என்று திருப்பிக் கேள்! அது முறை; நியாயமுங்கூட. அதைப் பேசாமல் இப்படி எதையோ கேட்பது அர்த்தமல்ல.

இதைப் போலத்தான் நேருவுக்கு ஒரு முறை மதுரையில் கறுப்புக் கொடி காட்டிய போது, நேருவுக்கா கறுப்புக் கொடி? நேருவுக்கா கறுப்புக் கொடி? என்று கக்கன் கேட்டார். அப்பொழுது 'நம் நாடு' இதழில் ஆசிரியராக இருந்த கல்யாண சுந்தரம் நேருவுக்குக் காட்டாமல் எனக்கா காட்டுவது என்றார். அதைப் போலத்தான் நான் கேட்கிறேன் டில்லி அரசே! உன்னிடம் கேட்காமல் நான் யாரிடம் கேட்பேன்.

நீ தானே சொன்னாய் இந்தியா ஒரே நாடு! எல்லோரும் ஓரின மக்கள்! பிரிந்து போகாதே என்று!

அதை மறந்து விட்டு அணைத்துக் கொண்டே இருக்கும் போது ஜேபியில் கை போடுகின்றாயே இது தகுமா?

பக்தவத்சலத்திற்கு நான் கூறுகிறேன். டில்லியிடம் கேட்பதற்கு முழு உரிமை இருக்கிறது. அவர்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் மக்களிடம் நான் கூறுவேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நான் செய்வேன்.

பக்தவத்சலத்திற்கு சொல்லுகின்ற நேரத்தில் இங்கு கூடியுள்ள மக்களுக்கும் நான் சொல்லுகிறேன் - மத்திய அரசு உதவாவிடில் போனால் போகிறது என்று சொல்லட்டும்