பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

 நம்முடைய நாட்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் - அக்கறையின் விளைவாக இதைச் சொல்லுகிறேன்.

ஏழைகளை
வதைக்கக் கூடாது.

ஏழை மக்கள் மீது மேலும் வரி விதிக்கக் கூடாது என்கிற முறையில்தான் புது டில்லியில் நடைபெற்ற திட்டக் கமிஷன் கூட்டத்தில் கலந்துகொண்ட நான் வற்புறுத்தினேன்.

விவசாயிகளுக்கு உள்ள தண்ணீர்த் தீர்வையை உயர்த்திட வேண்டுமென்றும் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்றும் அதன்மூலம் பணத்தைச் சேர்த்துத் திட்டங்களுக்கு உதவ வேண்டுமென்றும் தேசிய அபிவிருத்திக் கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதன் முதலாக நான்தான் எழுந்து பேசினேன். இது நடக்கிற காரியமல்ல, நான் இதற்கு ஒப்பவும் மாட்டேன் என்றதோடு இதைப்பற்றி யோசிக்கவும் நான் தயாராக இல்லையென்று இரண்டையும் திட்டவட்டமாக அறிவித்தேன்.

நான் சொன்ன பிறகுதான் அண்ணாதுரை சொன்னது போல் நாங்களும் இதற்கு உடன்பட முடியாதென்று காங்கிரஸ் முதலமைச்சர்களும் தெரிவித்தார்கள்.

ஒரே ஒருவர் அரியானா மாநிலத்திலிருந்து வந்திருந்த முதலமைச்சரல்ல, கவர்னர் - இந்தக் கருத்தை எதிர்த்தார்.அதற்குக் காரணமில்லாமலில்லை. எத்தனை நாளைக்கு நாம் பதவியில் இருக்கப்போகிறோம். மற்றவர்கள் வந்தபிறகு எப்படியாவது போகட்டும் என்கிற முறையில் அவர் தமது கருத்தைச் சொன்னார்.