பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


நிலக்கரிச் சுரங்கமும் அவர்களிடமே. ஆகவே இரண்டாயிரம் கோடி ரூபாய் மூலதனம் முடக்கப்பட்டுள்ள இத்தொழில்களில் இருந்து வருவாயைப் பெருக்கினால் ஏழை எளிய மக்களை வாட்டுகிற வரிகளைக் குறைக்கலாம் என்று நான் அங்கு எடுத்துச் சொன்னேன்.

இந்தியப் பேராசு தன் ராணுவச் செலவைக் குறைத்தேயாகவேண்டும் என்று நான் சொன்னபோது என்னை உற்றுப்பார்த்தார்கள்.

இராணுவச் செலவு
குறைக்கப்படல் வேண்டும்

பக்தவத்சலமாக இருந்திருந்தால் நாட்டுப்பற்றற்ற பேச்சு என்று சொல்லியிருப்பார். எப்படியிருப்பினும் இந்திய அரசு ராணுவச் செலவைச் சிக்கனப்படுத்தியே ஆகவேண்டும்,

இந்தியாவுக்கு ஆபத்து வராத அளவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்திச் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் ரூபாய் 100 கோடி வரை கிடைக்குமென்று நான் எடுத்துக் கூறினேன்.

பெரிய காங்கிரஸ்காரர்களெல்லாம் பதறுவார்கள்; சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் இருக்கும்போது இப்படியா பேசுவது என்று கேட்கக் கூடும் --- சீனாக்காரன் அணுகுண்டு வைத்திருக்கிறானே அதைச் சமாளிக்க வேண்டாமா? என்று கேட்பார்கள். சீனாக்காரன் நம்மை நோக்கி வந்தால் அதே அணுகுண்டை வைத்திருக்கும் மற்ற நாடுகளின் உதவி நமக்குக்கிடைத்தே தீரும்.

அதுமட்டுமல்ல, 18வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்களுக்கு கட்டாய ராணுவப் பயற்சி அளித்து தேவையான போது எல்லைக்கு அனுப்பலாம்.

அந்த:முறையில் பாதுகாப்பைப் பலப்படுத்தலாம். இதற்கு லட்சக்கணக்கான கழகத் தோழர்களைப் பயிற்சிக்கு அனுப்ப நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன்.