பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


1. பாதுகாப்புச் செலவைக் குறைத்து சிக்கனப்படுத்துவது.

2. வருமான வரி செலுத்தாதவரிடமிருந்து அதை மீட்பது.

3. 2 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமிடப்பட்டுள்ள தொழில்களிலிருந்து வருவாய்பெறத் திட்டமிட்டுச் செயலாற்றுவது.

இம்மூன்று வழிகளைக் கடைப்பிடித்துச் செயலாற்றினால் கணிசமான அளவு நிதி கிடைக்கும்.

ஏழைகளை வாழவைக்க முடியும் என்று தமிழகத்தின் சார்பில் நான் தெரிவித்தேன்.

முன்னாள் தமிழக அமைச்சரும் தற்போதைய திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வெங்கட்ராமன் கூட்ட முடிவில் என்னை சந்தித்து உங்களது யோசனைகளைச் செயல்படுத்த முயல்வோம். என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ஒரு உறுப்பு என்கிற முறையில் இந்தியா முழுமைக்கும் ஆலோசனை கூறி உதவவேண்டிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது என்றும் வெங்கட்ராமன் என்னிடம் கூறினார்.

எழுச்சி நாள் தரும்
மகிழ்ச்சி

தமிழகமெங்கும். ஜுலை 23 ல் எழுச்சி நாள் கொண்டாடப் படுவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் மகிழ்ச்சி அடையக் காரணம், இதை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல் காங்கிரசைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் சேலம்-தூத்துக்குடித் திட்டம் தேவைதான் என்று ஏற்றுக்கொண்டு கலந்து கொண்டிருக்கின்றன.