பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


"இப்போது ஏன் எழுச்சி நாள் ? நாட்டிலே வேறு பிரச்சினை இல்லையா?" என்று சிலர் கேட்கலாம்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மக்கள் வயிற்றுப் பிரச்சினையை மறந்து விட்டு - உணவுப் பிரச்சினையை விட்டு விட்டு இதற்கு வந்து விடவில்லை. ஓரளவு அதைச் சீர்திருத்தி விட்டு ஏழைகள் முகம் மலர்ந்த பிறகுதான் இதற்கு வந்திருக்கிறோம். இந்தப் பிரச்சினைக்கு ஏன் வந்தோம் என்றால், நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் எழுத்து வடிவில் இருக்கிறது. இரண்டு ஆண்டுகட்கு முன்பே பூர்த்தியாகியிருக்கவேண்டும். ஆனால் இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை. அதிலே உள்ளது தான் சேலம் இரும்பாலையும் தூத்துக் குடியும். இந்த எழுச்சி நாள் மூலமாவது அவர்கள் உணர வேண்டும் -- உறுதி தர வேண்டும்.

சேலம் மாவட்டம் கஞ்சமலைப் பகுதியில் கனிவளம் ஏராளம் என்று ஆராய்ச்சியாளர்கள் 200 ஆண்டுகாலமாகச் சொல்லி வருகிறார்கள்.

வெட்ட வெட்டக் குறையாமல், எடுக்க எடுக்கத் தீராமல் ஏராளமாக இரும்பு இருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் அதனை வெட்டி எடுத்து - உருக்கி - இரும்பாக்கி இங்கிலாந்துக்கு அனுப்பிப் பாலம் அமைத்துப் பார்த்து இருக்கிறார்கள்.

இதை அப்போதையத் தொழில் அமைச்சர் வெங்கட்ராமனிடம் சொன்னபோது அவர் அப்போதே கேலியாகப் பேசினாா் - “அது இந்தச் சேலத்தின் இரும்பல்ல ; அமெரிக்காவிலுள்ள சேலத்தின் இரும்பு!" என்று.

அவர் அதைக் கேலியாகச் சொல்லியிருக்கலாம். ஒரு வேளை உண்மையாக அப்படிச் சொல்லி இருந்தால், இவ்வளவு அறியாதவரா வெங்கட்ராமன் என்று அல்ல; அவரும் ஆட்சியில் இருந்தாரே என்றுதான் நாம் வருத்தப்படவேண்டும்.

கஞ்சமலைப் பகுதி இரும்பை எடுத்து சீமைக்கு அனுப்பி, வெற்றி கண்டிருக்கிறார்கள், வெள்ளைக்காரன் காலத்தில்