பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


இரும்பின்
திக் விஜயம்

நம்முடைய இரும்பு போகாத இடமில்லை- அந்தக் காலத்தில் மன்னர்கள் திக்விஜயம் செய்வார்கள் என்பார்களே— அதுபோல் நமது இரும்பு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தது.

பிறகு வெங்கட்ராமன் அமெரிக்காவுக்கு எடுத்துக் கொண்டுபோய் வந்தாா். அவர்களும் இது நல்ல லாபம் தரக் கூடியது என்றார்கள். கட்டை போடாமல் நிலக்கரியைப் போட்டு எரித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்கள்.

எந்த மாநிலத்திலும் தயாரிப்பதைவிட இதைமலிவாகத் தயாரிக்க முடியும் -- நாங்களே தயாரிக்க முடியும் என்றார் வெங்கட்ராமன்.

இவையெல்லாம் 1957 வரை உள்ள கதையை வேகவேகமாக நடைபோட்டுக் கூறி வந்தேன். இக்காலத்தில் காங்கிரசார் தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இதுவரை கிடைக்கவில்லை என்பதால் தான் நாம் எழுச்சி நாள் கொண்டுடாடுகிறோம்.

"இந்த விவரங்களை எல்லாம் இவர்கள் மக்களிடம் சொல்வார்களே - இதனால் நம் பிரச்சினை வெட்ட வெளிச்சமாகி விடுமே" என்பதால் தான் காங்கிரசார் இதை எதிர்க்கிறார்கள்.

கஞ்சமலைப்பகுதியில் 25000 ஏக்கர் நிலத்தை சர்க்கார் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அதிகாரிகளைப் போட்டு ஆராய்ச்சி செய்து ஏராளமான பணத்தைச் செலவு செய்து விட்டு இப்போது இல்லை என்றால் என்ன பொருள்?

4-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேலம் இரும்பாலை உண்டா இல்லையா என்பதைத் திட்டவட்டமாக மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும். இப்போது எங்களால் முடி-