பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


இந்த வேலை" எனக் கேட்பதில் அர்த்தமில்லை. அவன் குழந்தையைக் காப்பாற்றாவிட்டால் அவனுக்குப் பல்லக்குக் கொடுப்பதே பாதகமாகிவிடும். குழந்தையை ஓநாயிடமிருந்து காப்பது மூலம் - பல்லக்கில் சென்றாலும் பாதையை மறக்கவில்லை என்று பொருள்.

அரசை ஏற்றுக்கொண்டு விட்டோம்-பதவி கிடைத்து விட்டது - "இனி என்ன? சேலம் தூத்துக்குடித் திட்டம் கிடைத்த போது கிடைக்கட்டும் என்று விட்டு விட்டால் என்னைப் போல அற்பன் யாருமே இருக்க முடியாது.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஏராளமான சொத்துக்களைப் பர்மாவில் விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்கள்.

அதற்கான நட்ட ஈட்டுத் தொகை பர்மா அரசாங்கத்திடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். மத்திய அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக மத்திய அரசை வற்புறுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும்.

இப்படி வசூலிக்கப்பட வேண்டிய நட்ட ஈட்டுத்தொகை சுமார் 50 கோடி ரூபாய் இருக்குமென்று கருதப் படுகிறது.

இந்த 50 கோடி ரூபாயும் கிடைத்தால் அதை இந்த நாட்டுத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

தூத்துக்குடித் துறைமுகத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நெல்லை, ராமநாதபுரம் மதுரைமாவட்டங்கள் வளர்ச்சி அடையும். வேலை இல்லாத் திண்டாட்டம் போகும்.

தூத்துக்குடி துறைமுகம்-அதையடுத்து சேதுக்கால்வாய் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படுமானால் தென் பாண்டிய நாடு வளம்பெறும். தூத்துக்குடி இன்றும் மீன்பிடி துறைமுகமாக இருக்கிறது. ஆழ்கடல் துறைமுகமாக. இல்லை. தமிழக அரசு இனியும் சகித்துக் கொண்டிருக்காது.