பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


றின் வெற்றிக்கு முதலில் சரியான வகையில் திட்டமிடப்பட வேண்டியது அத்யாவசியமாகும். சில நிறுவனம் பொருள்களை நல்ல தரத்திலும் அளவிலும் உற்பத்தி செய்தளிப்பதோடு அரசு தான் நடத்துகிறதொழில்களைப்பற்றி சிந்தித்திடவும், அதன்மூலம் நற்பலன் காணவும் தகுந்த கருத்தையும் அளித்து சிந்தனையைத் தூண்டியுள்ளன.

கனிவளம்
குறைவல்ல

"நமது நாடு வறுமையும் வாட்டமும் மிகுந்த நாடு-இங்கு கனிவளங்கள், குறைவு. என்றாலும் புதிய தொழில்களைத் துவக்கி வெற்றி ஈட்டும் துணிவுடைய தொழிலறிந்தோர் பலரையும் நாட்டுக்கு இப்பகுதி வழங்கியுள்ளது" என்று திட்ட அமைச்சர் அசோக் மேத்தா அண்மையில் மேட்டூரில் பேசும்போது குறிப்பிட்டார். கனிவளம் குறைவு என்ற அவரது கூற்றை நான் ஏற்க மாட்டேன். சேலத்து இரும்பும் பாக்சைடும் திருச்சியின் ஜிப்சமும் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலும் வருமே-நம்மிடம் தோண்டி எடுக்கப்படாத இன்னும் ஏராளமான கனிவளம் உள்ளது. அரசியலில் நிதானமும், நிலையான நிர்வாக அமைப்பும் கொண்ட பகுதி இது - நம்மைக் காட்டிலும் ஆற்றல் மிகுந்த ஏதேனும் ஒரு சக்தி குறுக்கே வந்தாலொழிய நாம் சிறந்த வெற்றிகளைச் சாதிப்போம் என்பது உறுதி. ஒளி மிகுந்த எதிர்காலம் நம்முன் உள்ளது.

வடக்கே துர்காபூர் என்றும் ரூர்கேலா என்றும் திட்டமிடுமுன் தென்னகத்தில் உள்ள இத்தகைய தொழில்களை மத்திய அரசினர் வந்து பார்க்கட்டும். நாட்டினரிடையே. நிலவுகின்ற வறுமையும் அறியாமையும், அழுக்கும், வேலையின்மையும் அகற்றப்பட இம்மாதிரி இன்னும் பல தொழிற் கூடங்கள் அமைய வேண்டும்.