பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துள்ளார். அரசின் புதிய முயற்சிகள் யாரையும்,எந்தத் தொழிலில் உள்ளவர்களையும் நிலை குலையச் செய்வதற்காக அல்ல. அடிப்படைத் தொழில்கள் நாட்டுடமையாக இருக்கவேண்டுமென்ற பொதுக் கருத்துக் கொப்பவே இவை செய்யப்படுகின்றன.எந்தத் தொழிலையும் நிலைகுலையச் செய்யும்எண்ணம் ஒருதுளியுமில்லை

எங்களைப் பொறுத்த மட்டில் பஸ் தொழிலில் உள்ள பலர் எங்களுக்கு நெருங்கிய நண்பர்கள்- அவர்களது குறையை நாங்கள் அறிவோம். இந்த அரசு அவர்களுக்கு அவசியமானதைச் செய்யும். அவர்களையும் உள்ளடக்கியதே அரசு.

அவர்கள் வேறு துறைகளுக்குச் செல்லும்போது அரசின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும். தேவைப்படுகிற சலுகைகள் அளிப்போம்.

சில வட்டாரங்களில் கூறப்படுவதுபோல பகை உணர்ச்சியால் பஸ்களைப் பறித்து கொள்கிறோம் என்பது அர்த்தமற்றது, இத் தொழிலில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள டி வி எஸ், மகாலிங்கம் போன்றோருக்கு பஸ் தொழில் அவர்கள் நடத்தும் தொழில்களின் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளதேயாகும்.

அரசு ஏற்றிருக்கும் இத்தொழில் சிறக்க நடந்து, வருவாய் தந்து, நாட்டுக்குப் பயனளிக்க வேண்டும். அரசு இதை எப்படிச் செம்மையாக நடத்தலாம் என்பதற்கு தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் தக்க ஆலோசனைகளைக் கூறி உதவ முடியும்.

தனியார் துறையிலுள்ள தொழிலை சர்க்கார் ஏற்று நடத்தத் துவங்கியதும் அதன் லாபம் குறைந்து விடுகின்றதென்று ஆண்டு தோறும் கணக்குக் குழுக்கள் சுட்டிக் காட்டுகின்றன. கூறப்படுகிற குறைகளுக்குக் காரணம் இல்லாமலில்லை.