பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


இங்கிலாந்து
நாட்டில்...

அரசின் இந்தத் துறை மேலும் விரிவடையும் போது தனிப்படட பஸ் முதலாளிகளாக இருந்து திறம்படத் தொழில் நடத்தியவர்களையும் சேர்த்து ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டது. இங்கிலாந்தில் தேசியமயக் கொள்கை அமுலான போது அத்தொழில்கள் சிறப்பாக நடக்க தேசிய முதலாளிகள் குழு அமைக்கப்பட்டது போல இங்கும் அவர்களது திறனைப் பயன் படுத்த அத்தகைய குழுக்களை அமைக்க வேண்டும். இக்கருத்தை முன்பொருமுறை கோவையில் பேசும்போது நான் குறிப்பிட்டேன். இப்படிப்பட்ட நேரத்தில், கைகொடுக்க அவர்கள் முன்வருவார்கள் என்று நம்பலாம்.

இல்லாவிட்டால் தாங்கள் தேடிய பணத்தில் கல்லூரி என்றும் விடுதிகள் என்றும் அறச்சாலைகள் என்றும் நிறுவியிருக்க மாட்டார்கள். அத்தகைய ஒத்துழைப்பின் உச்சக்கட்டமாகவே இப்பணிக்கு அவர்கள் அளிக்கிற உதவியுமாகும்.

ஜாதகம்
சரியில்லையோ

நல்ல பெண் என்று எல்லோராலும் பாராட்டப்படும். பெண்ணுக்கு, நல்ல கணவன் கிடைக்காவிட்டால் அவளுக்கு ஜாதகம் சரியில்லை என்று கூறுவார்கள்.

அதுபோல் சேலத்து இரும்புக்கும் ஜாதகம் சரியில்லை போலிருக்கிறது; எனவே தான் வெளிநாட்டு நிபுணர்களாலும், உள்நாட்டு வல்லுனர்களாலும் பாராட்டப் பெற்ற பிறகும் சேலத்தில் இரும்பு ஆலை அமைக்கப்படாமல் இருக்கிறது.

சேலத்தில் இரும்பாலை அமைக்க கடந்த 15 ஆண்டுகளாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்து இருக்கிறது.