பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


இந்த ஆலைக்காகவும், தூத்துக்குடி துறைமுகத்துக்காகவும் தி. மு. கழகம் "எழுச்சி நாள்" கொண்டாடியது.

சேலத்து இரும்பு என்ற புத்தகத்தில் உள்ள தகவலைப் படிப்பவர்கள் “சேலம் இரும்பாலைக்காக நாம் இதுவரை பொறுத்துக் கொண்டிருந்ததே தவறு என்று உணர்வார்கள். நான் "சேலம் இரும்பாலை வேண்டும் " என்று கேட்பதை சிலர் தவறாக எண்ணுகிறார்கள். "டெல்லியுடன் மோத வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்ணாதுரை இதைக் கேட்கிறார்" என்று கருதுகிறார்கள்.

இது மிகத் தவறான கருத்தாகும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் சேலம் இரும்பாலைக்கு நாம் இப்போது எடுக்கும் முயற்சியே போதாது என்று துடித்து எழுவார்கள்.

தமிழக அரசு ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் எப்படியும் தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தையும், சேலம் இரும்பாலைத் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தைப்பொறுத்தவரை அந்தத் திட்டம் நிறைவேறுமா என்று இருந்த அச்சம் இப்பொழுது அடங்கி விட்டது, டெல்லி சர்க்காரும் தொடர்ந்து உதவி செய்ய சம்மதித்ததன் காரணமாக அங்கே தொடர்ந்து செம்மையாக வேலை நடந்து வருகிறது. எனவே தூத்துக்குடி துறைமுகத் திட்டம் நிறைவேறும். அது வெற்றி பெற்றே தீரும் என்பதில் சந்தேகமில்லை.

வெளி நாட்டினர் என்னைச் சந்திக்கும்போது சேலம் இரும்பாலையைப்பற்றி ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். இவ்வளவு சிறந்த திட்டத்தை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை" என்று கேட்கிறார்கள்.

அவர்களிடம் இந்த ஆலையை நடத்தும் அதிகாரம் டெல்லியில் தான் இருக்கிறது என்று சொல்ல எனக்கே