பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


கூச்சமாக இருக்கிறது. எனவே அவர்களிடம் "இன்னும் சில காலத்தில் நாங்கள் அதை நடத்துவோம்" என்று பதில் கூறி வருகிறேன்.

சேலம் இரும்பாலையை டெல்லி தொடங்க முடியாது என்று அறிவித்து விட்டால் தமிழக அரசே இங்குள்ள தொழிலதிபர்கள், போன்றோர் உதவியுடன் ஒரு தொழிலமைப்பைத் தொடங்கி அதன் மூலம் அந்த ஆலையை நடத்தலாம். என்று திட்டமிட்டிருக்கிறது. இதையே நான் சமீபத்தில் கூட டெல்லிக்கு எடுத்துக் கூறினேன்.

ஜப்பான் நிபுணர்களும் ஒரு தடவைக்கு நான்கு தடவையாக "சேலம் இரும்பாலையை உருவாக்கித் தருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

மத்திய அரசின்
முட்டுக் கட்டை

ஆனால் இந்த முயற்சிக்குக் குறுக்கே நின்று முட்டுக்கட்டை போடுவது டெல்லி தான். அவர்கள் சேலம் இரும்பாலையை அமைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறவும் மறுக்கிறார்கள்.

டெல்லியில் இருந்து இதுகுறித்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. சேலம் இரும்பாலை நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் வரும் என்கிறார் ஒரு அமைச்சர். ஆனால் இன்னொரு அமைச்சரோ நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் உண்டா என்றே முடிவு செய்யவில்லை என்கிறார்.

இன்னொருவர் "நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இரும்புக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்று பார்த்து விட்டு சேலம் இரும்பாலையைப் பற்றி யோசிப்போம்!"

இப்படி டெல்லியில் உள்ளவர்களிடையே சேலம் இரும்பாலை குறித்து தடுமாற்றங்கள் இருக்கின்றன. இந்தத் தடுமாற்றம் அவர்கள் அறிந்தே ஏற்பட்டிருந்தால் அதுகண்டிக்-