பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


-கத்தக்கது. அறியாமல் ஏற்பட்டு இருந்தால் பரிதாபத்திற்குரியது.

எப்படி இருந்தாலும் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டது வருந்தத்தக்கது. சேலம் இரும்பாலை ஜப்பான் உதவியுடன் அமைப்பது இயலாத காரியமல்ல.

விவசாயத் துறைக்கு
ஓர் நிறுவனம்

கிர்லோஸ்கர் நீண்ட பல ஆண்டுகளாக மிகுந்த சகிப்புத் தன்மையோடு அயரா உழைப்புடனும் இந்த நாட்டின் விவசாயத்தை ஒரு முற்போக்கான தொழிலாக ஆக்கிட பாடுபட்டிருக்கிறார்கள்.

வேளாண்மைத் துறை அமைச்சர் அயல்நாடுகளில் தயாரான என்ஜின்களையே நம்மவர்கள் விரும்புகிறார்கள் என்று சொன்னார். இதற்குக் காரணம் பழக்கமோ அல்லது மக்களிடையே வளர்ந்து விட்ட மனப்போக்கோ அல்ல; அந்த அன்னிய இயந்திரங்கள் நன்றாகவே பணியாற்றும் என்று அவற்றினிடத்தில் ஏற்பட்டு விட்ட நம்பிக்கையேயாகும். உள்நாட்டுப் பொருள்கள் நூற்றுக்கு நூறு தரமானவை - நன்றாக வேலை செய்யும் என்று மக்கள் அவற்றை நம்பும்படிச் செய்வதொன்றே சிறந்த வழி.

உள்நாட்டில் நம்மவர் பெற்றுள்ள தொழில் நுணுக்க - நிர்வாக - விஞ்ஞான அறிவும் திறனும் நம்மவர் எந்த நாட்டாருடனும் போட்டியிடக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியான இந்த என்ஜின்களில் 99 சதவீதம் இந்தியப் பொருள்களே என்பதையும் அதில் 70 சதவீதம். தென்னகத்தில் சிறு தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன், இம்மாதிரி உள்நாட்டுப் பொருள்களுக்கு. மதிப்பளித்து அவற்றைப் பயன்படுத்தினால் நாட்டில் சிறு