உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

தஞ்சை விளங்கிடும் என்று அவரிடத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. அவரும் உறுதுணையாக இருந்து, நமது நோக்கங்கள் நிறைவேறப் பேராதரவு தந்தார்.

இப்போது இங்கே 5 இலட்சம் செலவில் இந்த நிலையம் அமைக்கப்படுகிறது. இத்தகைய நிலையங்கள் நிரம்ப ஏற்பட வேண்டும். இது வரை, நம்மிடமுள்ள மீன் வளத்தில் 100-க்கு ஒரு பங்கைக் கூட நாம் பயன்படுத்தவில்லை.

நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்த போது, “உங்கள் நாட்டுக் கடற்கரை அருகே கூட நாங்கள் மீன் பிடிக்க வருகிறோம்.” என்று அவர்கள் சொன்னார்கள்.

முப்புறமும் கடல், கடல் எல்லாம் அலை. அலையெல்லாம் எண்ணிய மீன் வளம் உள்ளது. இதைத் தக்க முறையில் பயன்படுத்தினால், உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க நாம் வழி காணலாம்.

வகைப்பாடு : உணவு—மீன்
(11-6-68-இல் சென்னை எண்ணூர் மீன் உறைய வைப்பு நிலையத் திறப்பு விழாத் தலைமை உரை<)




26. மீன் வருவாய் பெருகிட


மீன் வளத்தைப் பெருக்குவதில், நாம் புதிய கட்டத்தை அடைந்துள்ளோம். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் தேவை. கப்பலைச் செலுத்த, வானொலி, தொலைபேசி முதலிய கருவிகளை இயக்கத் தேர்ந்தவர்கள வேண்டும்.