இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சே: சரி! காகிதம் எடு, நான் சொல்கிறபடி எழுது.
[ஜெகவீரன் காகிதம் எடுத்து எழுத முயற்சிக்கிறான். கை நடுக்கம். எழுத முடியவில்லை. சேகர் எழுதுகிறான்.]
ஜெ: இதிலே கையெழுத்துப் போடு.
சே: என்னப்பா எழுதியிருக்கிறாய்?
சே: படிக்கிறேன் கேள்.
"நான் இன்றிரவு, வியாபார சம்பந்தமாக என்னிடம் பேசவந்த ரத்தினம் என்பவனைக் குடிவெறியால், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்."
போடு கையெழுத்து. நீ, என் விஷயமாகவோ, சுசீலா விஷயமாகவோ. தேவர் விஷயமாகவோ ஏதாவது கேடு செய்ய நினைத்தால், இது சர்க்காரிடம் போய்ச் சேரும். நல்லபடி நடந்து கொண்டால், தப்பித்துக்கொள்ளலாம்.
ஜெ: சேகர்! கையெழுத்தான பிறகு என்னைக்......
சே: காட்டிக்கொடுக்க மாட்டேன். போடு.
ஜெ: (போடுகிறான் கையெழுத்து)
சே: உட்கார் நாற்காலியில்!
[கண்களைக் கட்டி வாயில் துணி அடைத்து, ஜெமீன்தாரரை நாற்காலியோடு சேர்த்துக் கட்டிவிட்டு, ஒருவிநாடி கழித்து ரத்னத்தைத் தொட அவன் சந்தடியின்றி எழுந்திருக்கிறான். இருவரும் வெளியே செல்கின்றனர்.]
காட்சி 47
இடம்:—பாதை.
இருப்போர்:—சேகர், ரத்னம்.
இருப்போர்:—சேகர், ரத்னம்.
சே: ரத்னம்! பிணம்போலவே இருந்தாயே இவ்வளவு நேரம்.
ர: நமக்கு இது பழக்கம் டாக்டர். போலீசிலே எப்பவாவது சிக்கிக்கிட்டா, கொன்னு போடுவாங்கோ. ஒரு அடி இரண்டு அடி
100