உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேசுகிறார்களே அது வீண் அபவாதம்! ஏனெனில், ஒருவனுடைய சிந்தனையும் செயலும், அவனவனுடைய தொழில் வாழ்க்கைமுறை, இலட்சியம், என்பனவற்றைப் பொறுத்திருக்கிறது. அந்த நிலையிலே, கருணாகரன் என்று புகழப்படுபவர்களும் கூட. பலசமயங்களில் இரக்கமற்று இருந்திருக்கிறார்கள். இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால், அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்!

நீதி: விசித்தரமான வாதமாக இருக்கிறது.

இரா : வேடன், இரக்கத்தைக் கொள்ள முடியாததற்குக் காரணம் அவனுடைய வாழ்க்கைமுறை, தொழில்! வேதமோதி வேள்வி நடாத்தும் முனிவர்கள் யாகப் பசுக்களைச் சித்திரவதை செய்யும்போது இரக்கம் காட்டாதது, அவர்கள், இரக்கம் என்பதைவிட, பக்தி என்ற வேறோர் இலட்சியத்துக்கு அதிக மதிப்புத் தருவதே காரணம். வேடனின் வாழ்வும், வேதமோதியின் உயர்வும், அவரவருக்கு, இரக்கத்தைவிட அதிக அவசியமுள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்ரமங்களிலே உள்ள மான் தோல் ஆசனங்கள், இரக்கத்தின் அடையாளச் சீட்டுகளா? விதவிதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின் செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை!! அவர்கள் அரக்கரல்லவா? நான் மட்டுமா அரக்கன்?

க: தபோதனர்களை, அரக்கராக்கி விட்டார் இலங்கேசன்! இனித் தயாபரனையும் குற்றம் சாட்டுவார்போலும்.

இரா: தாய்பிடிக்கத் தந்தை அறுக்கச் சீராளனைக் கரியாக்கும்படி, தயாபரன் சோதித்தது, இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான்! சிறுத்தொண்டன் உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக் கொண்டிருந்தால், சிவனாரை நோக்கி, "ஐயனே! பாலகனைக் கொன்று கறிசமைக்கச் சொல்லுகிறீரே? எப்படி மனம்வரும்? இரக்கம் குறுக்கிடுமே" என்று கூறியிருந்திருப்பார், உமது தொண்டர் புராணமும் வேறு உருவாகி இருக்கும், அல்லவா?

க: பேசினால் மிருகத்தின் கதை, இல்லாவிட்டால் மகேசன் கதை, இவ்வளவுதானா? இவை இரண்டும், வாதத்துக்குத் தக்கவையாகா, ஒன்று பகுத்தறிவு இல்லாத பிராணிக்கதை, மற்றொன்று மனித நீதிக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத மகேஸ்வரன் விஷயம். பிரஸ்தாப வழக்குக்கு இரண்டும் பொருந்தா.

15

113