பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

சு: நான் அவனைக் கண்டதும் திடுக்கிடுவது போலிருப் பேன். க: சரி. சு:அவன் உன்னை அடிப்பான், கொஞ்சம் முன்கோபி. மேலும், இப்படிப்பட்ட சமயத்திலே கோழைகூடத் தைரியசாலி யாவானல்லவா? க: அடிப்பானா? என் சுபாவம் ஒரு மாதிரி சுசீலா! அடி விழுந்தால் நான் மனுஷனல்ல, மிருகமாகிவிடுவேன்; கண்மண் தெரியாமல் தாக்குவேன். நடக்கட்டும். ஆனால்,ஒன்று. நான் இடையிடையே வேண்டாம், அடிக்காதே, என்று கெஞ்சுவேன்; சட்டை செய் யாதது போல நடந்துகொள்ளவேண்டும். க: சரி,சுசீலா! ஆத்திரத்தில் நான் எதையும் மறந்துவிடு வேன். அந்தச் சமயம் இந்தத் துப்பாக்கி என்னிடம் இருப்பது ஆபத்து. இதை நீ வைத்துக்கொள். சு: ரத்தினம்? நீ கள்ளனாகக் காலந்தள்ளுகிறாயே தவிர உண்மையிலேயே என்னைப்போல ஒரு தங்கை இருந்திருந்தால் உத்தமனாகி இருக்கலாம். எவ்வளவு நம்பிக்கையுடன் துப்பாக்கியை என்னிடம் கொடுக்கிறாய். க: நான் மறுபிறவி அல்லவா எடுத்திருக்கிறேன் சுசீலா! சாகசமாகப் பேசி என்னைச் சாகடிக்கவே நீ தந்திரம் செய்து துப்பாக்கியை வாங்கிக்கொண்டதாகவே இருக்கட்டும். சகல சுகமும் இருக்கும்போது, காதலுக்காக உயிரைவிடத் துணியும் ஒரு உத்தமியின் கரத்தால் மாள்வது, ஊராரிடமோ, ஊர் ஆள் வோரிடமோ உதைப்பட்டுச் சாவதைவிட மேலானதல்லவா? சு: ஒரு கள்ளன் காட்டும் இரக்கம்கூடக் காமுகனிடம் கிடைப்பதில்லை. க: ஆமாம், உன்னை வதைக்கும் அந்த வஞ்சகன் இப் போது அல்லது இன்னம் கொஞ்ச நேரத்தில் இங்கு வருவான். என்று எப்படித் தெரியும் உனக்கு. சு: (கேலியாக) அதுவா? தோட்டத்துச் சுவரைத் தாண்டி, கயிறு போட்டு ஜன்னலில் மாட்டி, உள்ளே வரத் தெரிந்த தல்லவா உனக்கு? க: ஆமாம், அது என் தொழில், பழக்கம்.

35

35