பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சு: கள்ளன் எந்த வீடும் நுழைவான். காமுகன் கதியற்ற கன்னிமாடமாகப் பார்த்து நுழைவான். பெண்களால் அவ்வித மான ஆண்களின் சுபாவத்தைத் தெரிந்துகொள்ளமுடியும். க: சு: அப்படியா? மேலும் நான் சம்மதித்துவிட்டேனல்லவா, அந்தச் சண்டாளன் அதே நினைப்பிலே இருப்பான். தூக்கமும் வராது. மோக மயக்கம் இருக்கும். தனியாகத்தானே. இருப்பாள். தகப்பனோ நம்மிடம் பயந்து கிடக்கிறான், போய்த்தான் பேசு வோமே என்று தோன்றும். வருவான். மேலும், காந்தர்வ விவாகம் என்று வேறே சொல்லி இருக்கிறான். க: மடையன்! வரட்டும். (உட்காருகிறான்.)

காட்சி 16

இடம்' சேகர் வீடு. இருப்போர்: சேகர். [சேகர் படுத்துப் புரள்கிறான், தூக்கமில்லை. படிக் கிறான், முடியவில்லை. பாடுகிறான், திருப்தி இல்லை. உலாவுகிறான் - யோசிக்கிறான்.) சே: (தனிமொழி) சுசீலாவை ஏன் அவ்வளவு அவசரமாக அழைத்துக்கொண்டு போனார்கள். ஒருவேளை, தேவருக்கு உடம்பு ஏதாவது செச்சே ! உடம்புக்குச் சரியில்லை என்றால். என்னை அல்லவா அழைத்திருப்பார்கள். மாரி அவசரப்படுத்தி அல்லவா அழைத்துக்கொண்டு போனாள். எதற்கும் டெலிபோன் செய்து கேட்போமே. 44 ஹலோ! ஹலோ!" [டெலிபோன் செய்கிறான்.) ஆமாம்! நான்தான், டாக்டர் சேகர்தான் பேசுகிறேன்..

36

36