பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 17 இடம்: தேவர் வீடு. இருப்போர்: தேவர், ஜெகவீரர். (தேவர் மேஜைமீது தலையைக் கவிழ்த்தவண்ணம் கவலையுடன் ஏதேதோ நினைத்துக்கொண்டிருக் கிறார். ஜெகவீரர், போதையுடன், அவரை விறைத்துப் பார்ப்பதும், உலவுவதுமாக இருக்கிறார். டெலி போன் மணி அடித்ததும் தேவர் பேசுகிறார்!] தே: என்ன சேகர்? இந்த நேரத்தில்... தே: ஓஹோ? சுசீலாவை அவசரமாக அழைத்துக்கொண்டு வரவே, பயந்துவிட்டாயா ?..... தே: அதெல்லாம் ஒன்றுமில்லை... ஜெ: யார் பேசுவது? தே: சேகரன். [ஜெகவீரர் குறுக்கிட்டு) ஜெ: சேகரனா ? சரி ! இங்கே வரச்சொல்லுங்கள். தே: யாரை? ஜே: அவனைத்தான். பயல், நாளைக்கு நிச்சயதார்த்தத்தின் போது ஏதாவது தொல்லை தரக்கூடும். வரவழைத்து..... தே அவன் காலில் வீழ்ந்து.... ஜே: காலில் விழுவதோ, கண்ணீர் பொழிவதோ, எனக்குத் தெரியாது,நான் வெளியே போய்வருகிறேன். அதற்குள்.... தே: (டெலிபோனில்) டாக்டர்? ஆமாம்? கொஞ்சம் வந்து போகிறீரா..... இல்லை......சுசீலா தூங்கிவிட்டாள். என்க்குக் கொஞ்சம் மார்வலி.... பயந்து ஆமாம்,சுசீலாவுக்குக்கூடத் தெரியக்கூடாது. விடும். உடனே தான்...... வருகிறீரா...... சந்தடி கூடாது. குழந்தை பயப்படும்.

37

37