பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ந: (கோவிந்தன் நிற்கிறான்.சீமான், போகும்படி கைகாட்டு கிறார் அலட்சியமாக. அவன் போய்விடுகிறான்.] நிலம் வைச்சிக்கிட்டு தானுங்க தொல்லை. இருக்கறதுன்னாலே இப்படித் சீ : ஆமாம்! அதெல்லாம், அவனுங்க, கையைப் பிசை வான்க, கண்ணைக் கசக்குவானுக, கொஞ்சம் சரின்னோம், போச்சு நம்ம அந்தஸ்தே போயிடும். இப்ப பணத்தைச் சேத்து நான் என்ன சாப்பிட்டுவிடவா போகிறேன். எவ்வளவு தான் தருமம் கோயில் காரியம். ந : ஆமாம், ஆமாம்! சீ : போன மாதம் தெரியுமா? புவனேஸ்வரி கோயில் இருக்கு பார். அதுக்கு இதுவரை தாசியே கிடையாது. அவளுக்குக் ஏதாவது கோயில் மானியம் விட்டாத்தானே வருவா. இல்லை? என்னிடம் குருக்கள் நடையா நடந்தாரு, அந்தப் பெண்ணும் வந்திருந்தா. சரின்னு, கோயில் மானியமாக ஒரு வேலி கொடுத்தேன். அவளுக்குப் பொட்டு கட்டியாச்சி. இப்படி எவ்வளவோ செலவு. இந்த விலாசனி பாட்டு......? அந்த ஜெகவீரன், இவளை யாரும் பார்க்காதபடி, ஒரு மாளிகையிலே வைத்திருக்கிறான். இப்போ, அவனே அவளை அழைத்துவரப் போகிறான். ஏன்? சும்மாவா? அவன் தரவேண்டிய கடனைத் தள்ளிவிடுவதாக ஒப்புக்கொண்டு விட்டேன். (டே! மோட்டார் சத்தம் கேட்கிறது. ஓடு! ஓடு ! சீக்கிரம்! அவர்கள்தான் !) [வேலையாள் ஓடுகிறான். சீமான் ஆடையைச் சரிப்படுத்திக்கொள்கிறார். நண்பன், ஆசனங் களை அவசரமாகச் சரிப்படுத்துகிறான். ஜெகவீரனும் விலாசனியும் வருகிறார்கள். விலாசனி நமஸ்கரிக்கிறாள். சீமான் சொக்கி விடுகிறார். வேலையாள் காப்பி கொண்டு வந்து வைக்கிறான். சீமான் காரணமில்லாமல் சிரித் கிறார். ஜெகவீரனை, அமோகமாக உபசரிக்கிறார். வேலையாளை அதிகாரம் செய்கிறார். சந்தோஷத் தால் சீமான் தலைகால் தெரியாமல் ஆடுகிறார். தோட்டக்காரன் அங்கே வருகிறான்....விலாசனி, பாட ஆரம்பிக்கிறாள். தோட்டக்காரன் வெளியே புறப்படுகிறான்.]

60

60