பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ : கூட இருக்கிறவரு? தோ: அவர்தான் ஜெமீன்தாரர் ஜெகவீரர். சொ: அவருக்கு இவ என்ன வேணும்? தோ: அவளை அவரு வைச்சிகிட்டு இருக்காராம். சொ: அட பாதகா! அப்படியா சொன்னான்? அவள் எப்படிச் சகித்துக் கொண்டாள், அந்த இழிவுக்கு. செ! இதோ வருகிறேன் இரு. (வீடு நோக்கி ஓடுகிறாள்.) காட்சி 31 இடம்:-தோட்டக்காரன் வீடு. இருப்போர்:-தேவர், சொர்ணம். (தூங்கிக்கொண்டிருக்கும் தேவரைத் தட்டி எழுப்பு கிறாள் சொர்ணம். அவர் கண் விழித்ததும், ஆத்திரத்துடன்] சொ: பெரிய குடும்பம்! கெளரவம் ! அந்தஸ்து ! ஜெமீன் வீடு! ஜெமீன்தாரர் வீட்டு மருமகப்பிள்ளை அல்லவா! தே: சொர்ணம்! என்ன இப்படிப் படுக்கையிலிருந்து எழுப்பி ஏசுகிறாயே, நான் பட்டதெல்லாம் போதாதா? 'சொ: 'சொர்ணத்தோடு வாழ்வது என்றால் தலை இறக்கம், அவமானமாக இருக்கும், அந்தஸ்து கெட்டுவிடும். புகுந்து பார்த்தால்தானே தெரியும் யோக்யதை. உள்ளே தே: என்ன சொர்ணம்! வெறிபிடித்தவள் போலக் கூச்ச லிடுகிறாயே! சொ: (பதைபதைத்து) உன்னாலே, தள்ளாடி நந்து வர முடிந்தால்கூடப் போதும். உன் கண்ணாலேயே பார்க்கலாம். பெரிய இடத்து இலட்சணத்தை. தே: (உட்கார்ந்துகொண்டு கவலையுடன்) என்ன அது. எதைப் பார்க்கவேண்டுமென்கிறாய் சொர்ணம்?

.64

64