பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் :- சீமான் மாளிகை. இருப்போர் : - சீமான், ஜெகவீரன், விலாசனி, நண்பர்கள். [விலாசனி,பாடி முடித்ததும், நண்பர்களும்,சீமானும் சபாஷ் என்று புகழ்கிறார்கள்.] அருமை! அருமையான சங்கீதம். சாரீர சம்பத் ஒரு நண்: காட்சி 32 அபாரம்! மற்ற நண்: கலைவாணியேதான்! (நண்பர்கள் விடைபெற்றுக்கொண்டு போகிறார்கள். ஜெகவீரரைப் பார்த்து, சீமான்.) சீ: ஜெகவீரரே! உள்ளே போய், உம்முடைய கடன் பத்திரத்தில் பைசல் எழுதி எடுத்துக்கொண்டு வருகிறேன். (உள்ளே போகிறார்.] ஜெ விலாசனி! விலா: போதும் உயிரை வாங்காதே. மானம் போகிறது! ஜெ: நான் இருக்கிறேன் கவனித்துக்கொள்ள, முட்டாள் மயங்கியே விட்டான், தேனில் விழுந்த ஈ போல. உண்மையை அவன் கண்டுபிடிக்கிறான் என்றே வைத்துக்கொள், வெளியே சொல்லமுடியுமா? சொன்னால் யார் நம்புவார்கள்? வி:ஈனத்தனமான காரியம் செய்ய்த் துணிந்து, அதற்கு என்னையும் உடந்தையாக்கிக் கொண்டாய். ஜெ காட்டி மறைக்கிறேன். வேறென்ன! பத்திரம் கைக்கு வந்ததும், பயல் இளித்துக்கொண்டிருக்க வேண்டியது தான். விலாசனி மாயமாய் மறைவாள் ! இந்தத் தந்திரம் செய்யா விட்டால், பயல், நமது சொத்தை ஏலத்துக்குக் கொண்டு வந்திருப்பான். இவன், இப்போது, நேற்று பணக்காரனானவன், பரம்பரை ஜெமீன் நம்முடையது. பகற் கொள்ளைக்காரன் போன்ற இவனிடம் அதை இழப்பதா? நமது கௌரவம் என்ன ஆவது? வி : உன் வாயால் பேசாதே கௌரவத்தைப்பற்றி. சுயநலமே உனக்கு முக்கியம். ஜெ: தியாகவல்லி நீ ! அதற்காகத் தலைவணங்குகிறேன்.

66

66