பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ? 4 சு: (குளறியபடி) ரத்னம் இதைக் கேள் ! (ரத்னம் தன் விடியைத் தளர்த்தவில்லை. விலகிக் கொள்ள சுசீலாவால் முடியவில்லை.] சே: (ஆத்திரத்துடன்) கள்ளி! உத்தமி பவானியின் மகளா ஐயோ, நான் சொல்வதை...(ரத்னம் இழுக்க) விடு, சு: ரத்னம். ர: சுசீலா! என்றைக்கேனும் ஓர்நாள் நமது ரகசியம் வெளியாகித்தானே தீரும். இன்று வெளிவந்துவிட்டது. அதனால் என்ன? [சேகர் திகைப்பும் ஆத்திரமும் அடைந்து] அடி,நயவஞ்சகி ! (ரத்னத்தைப் பார்த்து) யாரடா நீ? ஏன் தெரியவில்லையா ? மடையா! ர : சு: (பரிதாபத்துடன்) ஐயோ! ரத்னம்! விபரீதம் நடந்து விட்டது. இதைக்கேள். அவரைத் திட்டாதே ஆண்டவனே! ர: நள்ளிரவிலே ஒரு பெண்ணைத் தழுவிக்கொண்டு இருக் கிறேன், மடையன், அதைப் பார்த்தபிறகும் கேட்கிறான் யாரடா நீ ? என்று. முட்டாள்! சுசீலா! வா இப்படி! Cous [சேகர் சுசீலாவைப் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டு, ரத்னத்தை ஒங்கிக் குத்துகிறான். இரு வருக்கும் சண்டை மூண்டுவிடுகிறது. இடை சுசீலா கூச்சலிடுகிறாள், அழுகிறாள், சண்டை யை நிறுத்திவைக்க.] சு: கிணறுவெட்டப் பூதம் புறப்பட்டதே. சேகர்-ரத்னம் - சண்டை வேண்டாம் -- நிறுத்துங்கள். விபரீதம் நேரிட்டுவிட்டது. நான் சொல்வதைக் கேளுங்கள். { 10 கர், அடிபட்டு மயக்கமுற்றுக் கீழே சாயும் சமயமாகப் பார்த்து, ரத்னம் ஒரு நாற்காலியைத் தூக்கி அவன் மீது வீசக் குறி பார்க்கிறான். இதைக்கண்ட சுசீலா துடிதுடித்து, சேகரைக் காப்பாற்ற ரத்னத்தின் காலைப் பிடித்து இழுத்து விட, ரத்னம் கீழே விழுகிறான், ஒரு தடியைத் தூக்கி அவனைத் தாக்கி ]

ஓடிவிடு, போ!

73