பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயல்கிறாள். படுக்கை மேலே வீழ்கிறது. சொர்ணம் கீழேயும், கட்டில் மேலேயுமாக இருக்கிறது. ஈனக்குரலில் கூவுகிறாள். ரத்னம் உள்ளே வருகிறான்.) ர: அடடா! அம்மா விழுந்துவிட்டாயா? [கட்டிலைத் தூக்கி நிமிர்த்துகிறான். தாயைத் தூக்கி மெல்லப் படுக்கவைத்துவிட்டு.) கண்றாவி! ஏம்மா ! எழுந்தே நீ ? உன்னாலே முடியுமா இந்த நிலையிலே. சொ: அடே ! ரத்னம்! எங்கேடாப்பா போனே, இந்தக் கடைசி காலத்திலே, என்னோடு இரு, இப்ப நான் விழுந்து எழுந்து ஒரு முழுங்கு தண்ணி குடிக்கலையானா, உயிர் இழுத்துக் கிட்டே போயிருக்கும். ர: என்னாம்மா. செய்வது? உனக்காகத்தான் வெளியே போனேன். பணம் தேட. சொ: பணமா? ஏண்டாப்பா பணம்? ர: டாக்டருக்கு. -சொ : பைத்யண்டா உனக்கு. இன்னைக்கோ நாளைக் கோன்னு இருக்கறேன், இனி மருந்து வேலை செய்யாது. மன வியாதி அல்லவாடா என்னைக் கொல்லுது. அதுக்கு யாரிடமும் மருந்து கிடையாதுடாப்பா. [ரத்னத்தைப் பின்தொடர்ந்த சேகர், அங்கே நுழைந்து மறைந்துகொண்டு நிலைமையைக் கவனிக்கிறான்.] ர: பயப்படாதேம்மா! பணம் நிறையக் கொடுத்தா இந்தக் காலத்திலே பிணத்தைக்கூட எழுப்பிவிடுகிற டாக்டருங்க இருக் காங்க. உனக்கு என்னம்மா? பிழைச்சிக்கொள்வே. பணம் தேடிப் போனேன். பலிக்கலை. சொ: பணத்துக்கு எங்கே போனாயப்பா இந்நேரத்திலே. ர: எங்கேயம்மா போவேன்? வாடகை பாக்கிப் பணம் கேட்கப் போவேனா. வட்டிப்பணம் கேட்கப் போவேனா? திருடத்தான் போனேன். சொ: வேண்டாம்பா இன்னம் அந்தத் தொழில்.

75

75