பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்: இன்னக்கித்தான் கடைசீ அம்மா ! போன இடத்திலே ஒரு வேடிக்கை. சொ: என்னாடாப்பா வேடிக்கை. (எழுந்து உட்காருகிறாள், கட்டிலின்மீது.) ர : படுத்துக்கிட்டே கேளம்மா, உன்னாலே உட்கார முடியாதே, சொ: பரவாயில்லைடா ரத்னம், சொல்லு. தண்ணி குடிச்ச தும் கொஞ்சம் உசிரு வந்துது. ர: ஒரு பெண் இருந்த அறைக்குள்ளே நுழைந்துவிட்டேன். அவளுக்கு என்னமோ பெரிய வேதனையாம். யாரோ அவ மாமனாம், ஒரு ஜெமீன்தாரன், அவளைக் கலியாணம் செய்துக் கொள்ளணும்னு வற்புறுத்தினாங்களாம். (இடையே) ஏம்மா! படுத்துக்கொள்ளேன்1 காலை அமுக் கறேன். சொ: வேண்டாம்பா ! நீ சொல்லு, அப்புறம்? அந்தப் பெண்ணுக்குத் துளிகூட இஷ்டமில்லை, அவனைக் நல்ல அழகும்மா பொண்ணு. வெறுப்பாப் அந்தப் குடிச்சுச் செத்துப்போறதுன்னு போச்சு கலியாணம் செய்துகொள்ள. பாவம்1 உயிர்மேலேயே பெண்ணுக்கு. விஷத்தைக் தயாராகிவிட்டா. சொ : அட பாவமே! சொ : நான் ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி போயிருந்தேன், பெண்ணு மண்ணுதான். சொ: பாவம் ! இப்படி இஷ்டபடாதவனைத் தலைமேலே கட்டுவதாலே, வேண பெண்ணுக மாண்டு போறாங்க. ர: இந்தப் பெண்ணு புத்திசாலி, தப்பித்துக்கொண்டா. சொ: ஏண்டா ரத்னம்! விஷம் சாப்பிடாதேன்னு நீ புத்தி சொன்னயா? ர: வேடிக்கையா இருக்கும்மா, நீ கேக்கற கேள்வி. நான் போனது திருட! உபதேசம் செய்யவா போனேன்? நான் என்ன குருவா? அவளே ஒரு யோசனை சொன்னா! சொ: உன்னைக் கண்டு அவ பயப்படவில்லையா?

76

76