பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11 5 பல்கலைக்கழகங்கள் வளர்ந்துள்ளன, வளருகின்றன. கல்விக்கூடங்கள் பெருகி வருகின்றன. எனினும், இன்றும் மக்கள் தொகையுடன் பட்டம் பெற்ருேர் கிதாகையினே ஒப் பிட்டுப் பார்க்கும்போது, எத்தனை சிறிய அளவினது நமது முன்னேற்றம் என்பதனை உணரலாம். எனவேதான், நாட்டு நிலை உயர்ந்திட, நல்லோர் மிகப் பலருக்குக் கிடைத்திடா வாய்ப்பைப் பெற்றுள்ள உம்மிடம் மக்கன் நிரம்ப எதிர்பார்க் கின்றனர். நீவின் இந்நாட்டைச் சூழ்ந்துள்ள இல்லாமை, போதாமை, அறியாமை, கயமை என்னும் படையினை வீழ்த் திடப்பாடுபடும் முன்னணிப்படையினர். பட்டந்தனைக் காட்டிப் பாங்கான வாழ்வுபெற முந்திக் கொள்ளும் நிலையினர் என்னும் நிந்தனையை நீக்கிடுக. நீள் வெற்றி பெற்றிடுக என வாழ்த்துகிறேன். பட்டம் பெற்றிடுவோர் குறிக்கோளற்றுக் கிடந்திடின் நாடு குலையும்; எதிர்காலம் எழிலுள்ளதாக அமையாது; குறிக்கோளற்ற நிலேயே மனக்குழப்பம், கொதிப்பு, அதிர்ச்சி, ஆர்ப்பரிப்பு, ஒழுங்கற்ற செயல் கள், ஊறுவிளைவிக்கும் போக்கு, கலாம் விளைவித்தல், கட்டுக்கு உட்பட மறுத்தல் ஆகியவை எழக்காரணமாகிறது என்று கருதுகிறேன். நம் நாட்டு இளைஞர்களிடம், குறிப்பாக மாணவரிடம், கேடு நிறைந்த இயல்புகள் மிகுந்துவிட்டிருப்பதாகப் பலர் கவலை தெரிவித்துள்ளார்கள். நம் நாட்டு இளைஞர்களிடம், குறிப் பாக மாணவரிடம், நான் நம்பிக்கை இழந்துவிடவில்லை. மாருக அவர்களின் இயல்பிலே அடிப்படையான கோளாறு எதுவும் இல்லை. அவர்முன் குறிக்கோள் சீரிய முறையிலே காட்டப்படாததாலும், அறிவுரை வழங்கிடும் அன்பர்களில் பலரும் தன்னலப் பிடியிற் சிக்கத்தான் செய்கின்றனர் என் பதைக் காண நேரிடுவதாலும் அவர்கள் இயல்பு திரிந்து விடுகிறது, நேர்வழி அடைபடுகிறது, கேடுதரும் முறைகள் இனிப்பளிக்கின்றன என்று கருது கிறேன். எனவே, இளைஞரும் மாணவரும் நல்லியல்புடன் இருந்திட வேண்டு