பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

 மெனில், மற்றையோர் தமது சொல்லும் செயலும் பொது நலனுக்கு உகந்ததாக அமைந்திடுமென்று பார்த்துக்கொள்வது இன்றைய அவசரத் தேவை என்பதனைக் கூறிட விழைகின்றேன். அதேபோது மாணவர்கள் தமக்களிக்கப்பட்டுள்ள வாய்ப்பு எத்தனை அருமை மிக்கது என்பதனை உணர்ந்து அதற்கேற்பத் தமது செயலினை வகுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

"தத்தையின் கழுத்திலே பூட்டிடவா, கத்தும் கடல்மூழ்கி முத்தெடுப்பார்"? தனக்கென வந்துள்ளதையலன்றோ அதற்கு உரியான் !

அரைத்தெடுத்துப் பூசிமகிழ்தற்கன்றோ சந்தனம் ! அடுப்பு எரிப்பதற்கோ ? பட்டம் பெறுவதும் பயிற்சி பெறுவதும் நாட்டினருக்கு நல்வாழ்வு தந்திட. எனக்கென்ன தருகின்றனர், ஏன் இந்தத் தாமதம் என்னும் கணை தொடுக்க மட்டுந்தான? எவரும் அதுபோல் கூறார்

உம்மிடம் மிகுதியான நம்பிக்கை கொண்டுள்ளோரில் நானும் ஒருவன். புதியதோர் உலகு செய்வோம் என்று பாடிச் சென்ற பாவலர் *, உம்போன்றோரை மனத்துட் கொண்டே பாடினர். உம்மிடமின்றி வேறு எவரிடம் தூய தொண்டாற்றும் திறனே எதிர்பார்க்க முடியும்?

6

குறிக்கோள் தெளிவாக அமைந்திடின் மாணவர்களிடம் மாண்புமிகு செயலினை எதிர்பார்க்க முடியும் என்றுரைத் தேன். இந்தக் குறிக்கோளை மாணவர்கள் பெற்றிடத்தக்க விதத்தில் பாடத்திட்டமும் பயிற்சி முறையும் பழகுமுறையும் கல்விக் கூடங்களில் அமைத்திட வேண்டும்.

கல்விக் கூடங்களின் எண்ணிக்கை பெருகி, அரசுகளின் வருவாய்த்துறை அதற்கேற்ப அமையாதிருக்கும் நிலையில், கல்விக்கூடங்கள் எவ்விதமான சூழ்நிலையில் இயங்க வேண்டுமே அவ்விதம் இருந்திடச் செய்வதும் இயலாததாக

  • பாரதிதாசன்