பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

காலை, இங்குமங்கும் அவற்றை விளக்கியும், கல்வியோடு தொடர்புடைய பல துறைகளில் ஆய்ந்த வல்லுநர்களின் முடிவுகளுக்கேற்பப் பாமரனின் கருத்து நோக்கினை உணர்த் தியும் காட்ட விரும்புகிறேன்.

சிலர் என்னதான் வருத்தமுற்ற போதிலும் பாமரனின் காலமிது. கவனத்தில் அதிகங் கொள்ளப்பட வேண்டியது அவன் கருத்தே. அப்பட்டமான அவன் நிலையிலேயே அவனைப்பற்றி எடுத்தியம்ப நான் உரிமை கொண்டாடுகிறேன்.

மெய்யறிவியல், அரசியல், பொருளியல், ஒழுக்கவியல் ஆகியவற்றில் கோட்பாடுகளும் கொள்கைகளும் இருந்தாலும், அவை திட்டவட்டமாக அவனுக்காக அமைந்தவையே. திண்ணமாகக் கூறுமிடத்து, இவை தொடர்பான விளக்கங்கள் அறிஞர்களிடமிருந்தும் வல்லுநர்களிடமிருந்தும் வரவேண்டும். அவற்றை அன்றாட அலுவலில் செயல்படுத்தவேண்டிய திறம் ஆட்சியாளரால் மேற்கொள்ளப் படவேண்டிய ஒன்றாகும்.

பல்கலைக் கழகங்கள் அறிவுக் கருவூலங்களாகவும், எண்ணம், அறிவு, கொண்டு ஆகியவற்றைப் பரப்பும் திருத்து தரகங்களாகவும் இருப்பதால், அவை பீடுடைய பணியை ஆற்றவேண்டியுள்ளன. அப்பீடு ஒவ்வொருநாளும் வளர்ந்த வண்ணமே உள்ளது. ஏனெனில், எல்லாத்துறை களிலும் அறிவு எல்லைகளிலும் சமூகத்தை மேம்படுத்தும் பணியில் தனியார்கள் மேன்மேலும் தங்களைத் தகுதியாக்கிக் கொண்டுள்ளனர். மக்களாட்சிக்குக் கால்கோள் செய்து, முடியாட்சியையும் முனைப்பாட்சியையும் தவிர்த்துள்ள காலத்தின் நிலையாகும்இது.

முடியாட்சிக் காலத்திலும் கோமானாட்சிக் காலத்திலும் அரச அவையினையோ ; கோமான்கள், உயர்குடிமக்கள் ஆகியோரின் பொன்மினுக்கு மாளிகைகளையோ அணி செய்யவே அறிஞர்களையும் கவிஞர்களையும் பல்கலைக்