பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3.சிறுசேமிப்பு


தமிழகத் திட்டத்தின் அசல் இலக்கு ரூ.135 கோடி. இதை ரூ.65 கோடிக்குக் குறைத்ததுடன் பெரிய திட்டத்திற்கான நிதி வசதிகளை இந்த அரசு தேடிக் கொண்டாலுங்கூட, மைய அரசின் ஒதுக்கீடு ரூ.42 கோடியாகவே இருந்துவரும் என்றும் மைய அரசு தெரிவித்துள்ளது.

திட்டத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து தமிழக அரசு குறைத்துள்ளது. திட்டத்தின் அளவு ரூ.83 கோடி என அமைத்துள்ளது. இப்போதுள்ள நிலவரத்தில் ரூ.23 கோடி அளவுக்கு நிதி வசதிகளைத் திரட்டிக் கொள்ள இயலும் என்று நிதித்துறை மதிப்பிட்டுள்ளது. மைய அரசு தரும் ரூ.42 கோடியுடன் சேர்த்துத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.65 கோடி கிடைக்குமென்பதே இப்போதைய நிலை. இந்நிலையில்தான் சிறுசேமிப்புகள் மூலம் இன்னும் அதிகப்படி நிதி வசதிகளைத் தேடிக் கொள்ளும் பொருட்டுப் பொதுமக்களின் ஆதரவை நாடுகிறேன். நிதி வசதிகளைத் திரட்டுவதற்காகப் புது வரிகளை விதிப்பதென்பது அரசுக்கு எளிதுதான். ஆனால், இவ்வாறு செய்வது அறக்கோட்பாடுகளுக்கு இயைந்ததாக இருக்காது. மக்கள் தரும் சிறு சேமிப்புகளைக் கொண்டு திட்டத்துக்கான பணத்தைத் தேடிக் கொள்வது அறமாகும்.

அரசாங்கம் நிதி வசதிகளைக் கோரினால், உடனே மக்களின் மனத்தில் அதிகாரத் தோரணையில் கேட்கிறார்கள் என்ற தவறான எண்ணம் உண்டாகும். எல்லாம் பொது நன்மைக்காக என்று மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். பிற்காலத் தலைமுறையினருக்காக, இளம் சந்ததிகளுக்காகத் திட்டங்களை நிறைவேற்ற நிதி வசதி தேவைப்படுகிறது என்பதைத் தெளிவுறுத்த வேண்டும். அப்போது தானாகவே இந்த இயக்கத்தில் வேகம் பிறக்கும்.

1968-69க்கான தமிழகஅரசுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்யக் சிறு சேமிப்பை ஊக்குவிக்குமாறு அனைத்து வகையினருக்கும் அண்ணா விடுத்த வேண்டுகோள்