பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


ஏற்படுத்திக்கொள். ஆனால் பார்ப்பனீயத்தை வளர்க்க விரும்பாதே! தியாகராயர் அன்று உண்டாக்கிய அறிவுப் புரட்சி இன்று எங்களிடையே எவ்வளவு தூரம் வளர்க்திருக்கிறது என்பதைக் கண்டு களி. பள்ளிக்கூடங்களிலே இடம் கிடைக்கவில்லையே என்ற பயம் உன்னிடம் குடி கொண்டிருக்கிறது. இதற்காக அல்லாடியையும் வைதீகவரதாச்சாரியையும் அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போகிறாய்! சட்ட புத்தகத்தைப் புரட்டிப்பார்க்கிறாய்! என்ன என்னவோ செய்கிறாய்! சட்டத்தில் வெற்றி பெற்று விட்டால் கூட என்ன ஆய்விடும்? அதனால் பிரச்னை தீர்ந்து விடுமா? நாட்டு மக்களிடையே உள்ள அதிருப்தியை அது பெருக்குமே அன்றிக் குறைக்காது. உங்களுக்குப் பள்ளிகளில் இடங்கிடைக்கவில்லை யென்றால் நேர்மையாக நீங்கள் செய்யவேண்டிய தென்ன ? இன்னும் அதிக பள்ளிகள், கல்லூரிகள் அமைக்க வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேளுங்கள். அதை விட்டுவிட்டுத் தகுதி-திறமை என்று கூறாதீர்கள். கெடுவழி செல்லாதீர்கள். இவை பிரச்னையைத் தீர்க்கும் வழிகளல்ல, பெருக்கும் வழிகள்.

முதலில் அறிவுப் புரட்சி

திராவிடர் என்ற உணர்ச்சியும் திராவிட நாடு என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிதைந்து வந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப்போரிட்டுச் சீர் கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு ஒரு குறையுமில்லை. மற்ற பிரசாரங்களை விட அறிவுப் பிரசாரம் தான் முக்கியமானதென்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத் துவக்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு நாமளைவரும் பூரிப்படைகிறோம். இன்றைய தினம் திராவிட இனம்