பக்கம்:அண்ணா காவியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அண்ணா காவியம்


<poem> அறுபத்து நான்குதிரு விளையா டல்கள்

அணிசெய்த நான்மாடக் கூடல் தன்னில்,

அறுபத்தொன் றாமாண்டில், மூன்றாம் சுற்றில்,

அழகுடனே மாநிலமா நாடு கூட்டத்

தறுகண்முத் துத்தமுக்கம் திடலைக் கேட்டார்.

தரமறுத்தார் நல்லவராம் ஆட்சி யாளர்!

"மறுபடிஓர் நாள்வரும்; நான் பார்த்துக் கொள்வேன்

மறவாதீர்!" என்னுமறை கூவல் விட்டார்!



தேர்தலுக்கு நிதிதிரட்டும் மாநாடாகத்

திருப்பரங்குன் றத்தில்நாம் சிறப்புப் பெற்றோம்.

"யார் தயவும் கோரவில்லை!" என்ற பாங்கை

இன்னொருகால் நிலைநிறுத்திக் கொண்டார் அண்ணா,

நீர்பெருகித் தஞ்சையெல்லாம் மூழ்கி நிற்க,

நேரடியாய்த் தலைமையுரை நிகழ்த்தி விட்டுப்

போர்முனைக்குச் செல்பவ்ர்போல் படகில் சென்றார்!

பொல்லாங்கு களைவதற்கும் உதவி செய்தார்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/124&oldid=1079909" இலிருந்து மீள்விக்கப்பட்டது