பக்கம்:அண்ணா காவியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரியணை ஏறிய காதை
145

"பொறுப்போடு நடந்திடுவோம்; மக்களுக்குப்
பொல்லாங்கு நேராமல் காப்போம்" என்றார்.

வெறுப்போடு, தீப்பெட்டி கையி லேந்தி,
வெறிகொண்ட முதலமைச்சர் கோட்டை சென்று

குறிப்பாகக் கோப்புகளில் சிலவற் றைத்தாம்
கொளுத்தினராம்; என்ன பெருந்தன்மை? ஆகா!

மறுப்பாரோ? மாநிலத்தில் இதுபோல் யாரும்
மக்களது தீர்ப்பினையே மறைப்பார் உண்டோ?




தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ கத்தின்
தலையமைச்சாய் வரவேண்டும்' என்று பாடும்

தமிழ்க்கவிஞன் கூற்றுதனை மெய்ப்பிக்கத்தான்--
தமிழறிந்தார் உள்ளமெல்லாம் உவகை பூக்கத்--

"தமிழகத்தின் முதலமைச்சுப் பொறுப்புக் கேற்ற
தலைவனும் நீ!" என்றுரைத்துக் கழகத் தோழர்

தமிழகமே ஆனந்தக் கண்ணர் சிந்தத்
தக்கவாறு தேர்ந்தெடுத்துப் பெருமைசேர்த்தார்!

அ.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/147&oldid=1080012" இலிருந்து மீள்விக்கப்பட்டது