பக்கம்:அண்ணா காவியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நோய் வீழ் படலம்
153

பொங்கலெனில் தமிழர்க்குத் திருநாள் என்று
புதுமெருகு தந்த அண்ணன் அந்த ஆண்டுப்

பொங்கலினைக் காஞ்சியிலே சுவைக்க எண்ணிப்
போம்வழியில், "கலைவாணர் சிலைவைத் துள்ளோம்,

தங்களது திருக்கரத்தால் திறக்க வேண்டும்;
தமிழ்த்தாயின் கலைமகனைத் தலைமகன்நீ

சிங்காரம் செய்க" என்றார்; இறுதி யாகச்
சிலசொற்கள் பேசிவிட்டுச் சென்றார்; மீண்டார்!




உண்ணவுமே இயலவில்லை; ஒருப ருக்கை
உட்செல்ல வழியில்லை; உடல்மெ லிந்து,

கண்மலரும் ஒளியிழந்து, நடைத ளர்ந்து,
காற்றுக்கு மொட்டைமாடி மீத மர்ந்து,

எண்ணமெலாம் நாடு, மொழி, கழகம், மக்கள்,
என்றிருக்க, அறியார்போல் நடித்து வந்த

அண்ணனுக்கு நிகர் யாரே? அவர்பார்க் காமல்
அமரிக்க மில்லருக்குக் கொடுத்த தந்தி...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/155&oldid=1080033" இலிருந்து மீள்விக்கப்பட்டது