பக்கம்:அண்ணா காவியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நோய்லீழ் படலம்
155

உறக்கமின்றி, ஊனின்றி, அடையா றெங்கும்
உட்கார்ந்து கிடந்ததெல்லாம் வீணா னாலும்...

மறக்கவொணாக் காட்சியன்றோ? மாநி லத்தில்
மனிதஇனத் தலைவரிலே வேறு யார்க்கும்

சிறக்குமிந்தப் புகழுண்டோ? செல்வாக் குண்டோ?
சீக்கியராம் உச்ச்ல்சிங் காட்டி நின்ற

அறக்குணத்தைப் பாராட்டார் உண்டோ? "என்றன்
ஆருயிரைத் தருகின்றேன்; அண்ணன் வாழ்க!




இரத்தத்தைச் சிறு நீர கத்தைத் தந்தால்
இழப்பினையே ஈடுசெய்யப் பொருத்து கின்றீர்!

உரத்தையெமக் களித்திட்ட தலைவன் வாழ
உயிர்த்தானம் நான்தருவேன், பெற்றுக், காப்பீர்!

மரத்துப்போய் மண்டையிலே மூளை யற்ற
மாக்களையும் மக்களாக்கி வாழ்வு தந்து,

தரத்தையெலாம் உயர்த்தியவன் தலையைத் தூக்கத்
தக்கதென்ன மருத்துவர் காள்? யாவும் செய்வீர்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/157&oldid=1080222" இலிருந்து மீள்விக்கப்பட்டது