பக்கம்:அண்ணா காவியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவலம் சூழ் காதை
159

கண்னெனக் காத்த முன்னணி அமைச்சரும்

அஞ்சினர் கெஞ்சினர்; அனைவரும் கண்டிட

இராசாசி மண்டபம் ஏறும் படிகளின்

வரிசையில் வைத்தும் பார்த்தனர் மன்னனை!




பரிமளம் இளங்கோ கவுதமன் பாபு

உரிமை பெற்றஉயர் அண்ணியும் மச்சியும்

அழுதனர் அலறினர் என்றே கூறிடின்

முழுவதும் சொன்னதாய் முடியுமோ? இரவெலாம்

கிடைத்த வண்டியைப் பிடித்துக் கொண்டு

வெளியூர் மக்கள் விரைந்தனர் சென்னை!

கூண்டினில் ஏறி மாண்டு மடிந்தோர்

வேண்டா வழியென வெறுக்கவு மில்லை!

நாட்டுநன் மக்களில் ஒன்றரைக் கோடிபேர்

வீட்டுத் தலைவனின் வீதி உலாவினைப்

பார்த்தழக் கூடியே பட்டினி கிடந்தவர்

சீர்த்தியை இங்ங்னம் செப்பியே அண்ணனின்

கீர்த்தியைப் பாடுமே கின்னசுப் புத்தகம்;

ஆர்த்தெழுங் கடலலை அமைதியாய் அழுததே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/161&oldid=1080230" இலிருந்து மீள்விக்கப்பட்டது