பக்கம்:அண்ணா காவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொகுப்புத் தோரணங்கள்
கவிஞர் அ. மறைமலையான்

காவியம்' என்னும் இலக்கிய மாளிகையைக் கலை யழகோடு எழுப்பும் கைதேர்ந்த சிற்பியாகத் திகழ்பவர் இன்று கவிஞர் கருணானந்தம் அவர்கள். இதற்கு ஒர் எடுத்துக்காட்டான எழுத்து வைரமே 'அண்ணா காவியம்.' பேரறிஞர் அண்ணா அவர்களைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கி, முதன் முதலில் ஒரு காவிய மாளிகை எழுப்பி அதிலே அவரை அமர்த்திச் சிறப்பித்த தனிப் பெருமை கவிஞர் கருணானந்தம் அவர்களையே சாரும்.

  • வெண்பாவிற்குப் புகழேந்தி; விருத்தத்திற்கு வில்லி புத்துரார்-என்று சொல்லுவார்கள். அந்த வில்லிபுத் தூராரையே வெல்லக் கூடிய விருத்தங்களை இந்நூலில் வெல்லத் தமிழில் விரித்திருக்கிறார் கவிஞர்.

இவரது கற்பனை கொஞ்சும் கவிதை நெஞ்சத்திலிருந்து எண்சீர் விருத்தங்கள் மட்டுமே பழச் சாறாய்ப் பாய்ந்து வரவில்லை; அகவற் பாக்களும் சந்தப் பாக்களும் கூடப் பால் சோறாய் வழிந்தோடி வந்துள்ளன,

பொதுவாக ஒரு நூலுக்கு வெளியீட்டு விழா நடத்துவதுதான் தமிழ்நாட்டில் வாடிக்கை.

எந்த ஒரு நூலும் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே திறனாய்வுக் கருத்தரங்குகளையோ-அவற்றை விடப் பட்டிமன்றத்தையோ-சந்தித்ததாக வரலாறு இல்லை.

அந்தப் புரட்சி வரலாற்றையும் படைத்த முதல் நூலாக நிமிர்ந்து நிற்கிறது கவிஞர் கருணானந்தம் அவர்களது கைவண்ணத்தில் மலர்ந்துள்ள அண்ணா காவியம்."

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்தான் அண்ணா காவியம் முதன் முதல் வெளியிடப் பெற்றது. எவ்வளவு பொருத்தமான அரங்கேற்றம் அது!

சென்னை திருவள்ளுவர் மன்றம் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நூலை வெளியிட்டார்.

முதற்படியை ஆற்காடு வீராசாமி அவர்கள் நூறு ரூபாய் கொடுத்துப் பெற்றுக் கொண்டார். இரண்டாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/7&oldid=1158590" இலிருந்து மீள்விக்கப்பட்டது