பக்கம்:அண்ணா காவியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அண்ணா காவியம்


அரசியலில் மிகப்பெரிய மாற்றந் தந்த
அண்ணாவின் தீர்மானம் அந்த நாளில்

வரலாற்றுப் புகழ்பெற்றுத் திகழும் வண்ணம்
வடிவத்தைத் திட்டியவர் நம்அண் ணன் தான்!

பெறலரிய பட்டங்கள் பதவி எல்லாம்
பிச்சையாக வெள்ளையராம் அயல்நாட் டார்கள்

தரலானார் நம்மவர்க்கே! அவற்றை நீக்கித்
தன்மானம் உடையரெனக் காட்ட வேண்டும்!



காலமெலாம் தம்ஆட்சி இந்தியாவில்
கவிந்திருக்க உதவிடும் இந் நீதிக் கட்சி!

கோலமிகும் கவர்ச்சிகளால் தம்மை நத்திக்
குலவுதற்குப் பரிசுசில தந்தால் என்ன?

ஞாலமெலாம் கட்டியாளும் ஆங்கி லேயர்
நம்மவரை மிகஎளிதாய் நினைத்துவிட்டார்!

சீலமிகும் அண்ணாவின் சிந்தனைக்கோ
சிறப்பளிக்க வில்லையவர் கபட நோக்கம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/76&oldid=1079242" இலிருந்து மீள்விக்கப்பட்டது