பக்கம்:அண்ணா காவியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அண்ணா காவியம்

தங்கத்தாம் பாளத்தில் விழுந்த கீறல்;
தடவிவிட்டே சரிசெய்தாற் போலத் தந்தை

இங்கினிமேல் எனக்குப்பின் அண்ணா வேதான்!

என்பெட்டிச் சாவிஇனி அவரின் கையில்!

பொங்கியெழுந் தார்ப்பரிப்போம்; ஒமந் துாரார்
புகுத்தஎண்ணும் இந்திதனைத் துTள்து ளாக்கிச்

செங்குருதி குடந்தையிலே ஒட விட்ட
சிறுமதியோர் ஆட்சியினைச் சாய்ப்போம்! என்றார்,



உலகம் போற்றும் உத்தமர் காந்தியைப்
பலகால் நீங்காப் பழியினைச் சுமந்திட

மதவெறிக் கோட்சே மாய்த்தனன் அன்றோ?
இதயந் தாங்கா இப்பே ரிழப்பினால்

தந்தை பெரியார் தனயன்அண் ணாவுடன்
சிந்தை கலங்கிட நொந்தனர்! அரசினர்

கருப்புச் சட்டைப் படைக்கும் ஒருதடை
விருப்புடன் கொணர்ந்து வீராப்புக் காட்டினர்!

தடையினை மீறித் தந்தையின் கட்டளை
முடித்திட அண்ணா முனைந்தே கருப்புச்

சட்டை அணிந்தனர், சட்டம் உடைபட!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/94&oldid=1079687" இலிருந்து மீள்விக்கப்பட்டது