பக்கம்:அண்ணா காவியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணீர்த் துளிகள்
97


காஞ்சியில்போய்ப் படுத்துவிட்டார் அண்ணா; வேறு

கதியென்ன, தளபதியே மனமொ டிந்தால்7

தீஞ்சொல்லால் திராவிடத்தின் இளைஞர் கூட்டம்

திரட்டிவந்த தியாகமணி, மெளன மாகப்

பாஞ்சாலி துகிலுரிதல் பார்த்தி ருந்த

பாண்டவர்போல் கழகத்து மானம் போக

நோஞ்சானாய் எண்சானும் ஒருசா னாகி

நொடிந்தவராய்க் குமைந்துருகி நைந்து நொந்தார்



சம்பத்துக் கேமாற்றம்! அண்ணன் பிள்ளை

தானேதான் சரியான வாரி சென்றார்!

நம்பழைய கோவிந்த சாமி, நல்லார்

நடராசன், குருசாமி கூடிப் பேசி

வெம்புமனம் விரோதத்தில் மூழ்கி நிற்க,

விரைந்தோடி அண்ணாவைக் கண்டு கேட்டு,

வம்புசெய்ய வருகவென்றார்; மறுத்தார் அண்ணா!

வரமாட்டேன் போங்களென்றார் வெந்து கொண்டே!

அ.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/99&oldid=1079696" இலிருந்து மீள்விக்கப்பட்டது