பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

207


இதைச் சொல்லிவிட்டு “அடுத்ததைச் சொல்லட்டுமா? இன்னும் ஏழெட்டு Stanza இருக்குது அண்ணா!” என்றேன். “வேண்டாம், ஒன்னெ நம்பறேன். ஏதோ தவறு நடந்துபோச்சு. பரவாயில்லய்யா ஒன் கருத்து இன்னொருத்தர் மூலமாவும் பரவுறது நல்லதில்லியா?” என்றார்-மேலும் தொடர்ந்தார் அண்ணா. முன்னே கூடச் சொன்னியே-திராவிட நாட்டுலே நீ எழுதிய ஒரு பாட்டை, யாரோ நம்ம அய்யா பேசிய கூட்டத்திலே, மேடையிலே பாடினாங்கண்ணு,”

“ஆமாண்ணா, இங்கேதான் பொத்தனூர்லெ பாடினாங்க!”

“சரி. அங்கே அவரு, இந்தப் பாட்டை எழுதினது இன்னார்; அது இன்ன பத்திரிகையிலே வந்தது அப்படின்னு (announce) அன்னவுன்ஸ் பண்ணிட்டா பாடுனார்?”

“ஒண்ணுமே சொல்லலியே எழுதின எனக்கு மட்டும் கேட்கச் சந்தோஷமாயிருந்தது!”

“இருந்ததா? அப்ப அதை அனுமதிச்ச நீ, இப்ப இது மட்டும் எழுத்துத் திருட்டுன்னு ஏன் பதைக்கிறே? சரி, போகட்டும் விடு. அது என்ன பாட்டு, கொஞ்சம் சொல்லேன். பாட முடிஞ்சாலும் பாடு, கேட்கலாம்.”

“ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க அண்ணா, ஒங்க லாஜிக்கை ஒத்துக்கறேன்! இதான் அந்தப் பாட்டு, போன ஆண்டு எழுதியது!”

இந்தத் திராவிடம் என்னுடைய நாடு
என்று தினக்தொறும் கீயிதைப் பாடு
முந்தித் திராவிடர் முறையுடன் ஆண்டார்;
மூடத்தனத்தாலே முழுமோசம் பூண்டார்!
வந்து புகுந்திட்ட மறையோரை நம்பி!
வகையின்றி வாடினது இனிப்போதும் தம்பி!
சொந்தத் தமிழரின் சுதந்திரம் நீங்க,
சூழ்ச்சிகள் செய்தோரைச் சூறைசெய் ஏங்க!