7
ஆனால் தோழமை, இவ்வளவுக்கும் மேலான ஒர் நிலை, பேதம் நீங்கிய, நீக்கப்பட்ட, அல்லது கவனிக்கப்படாத நிலை அல்ல—பேதம் ஏற்படாத நிலை—ஏற்பட முடியாத நிலை.
தாங்கள் இது ஒரு தாய் நாட்டவர்—பற்று. அவ்வளவுதான். ஒரு மதக்காரர்—பாசம்; அதற்குமேல் இல்லை. ஒரே கட்சிக்காரர்—நேசம் அவ்வளவோடு நின்று விடும். ஏனெனில், இவை ஒவ்வொன்றும் கடைசி வரை நீடிக்கக் கூடியதல்ல. மனதுக்கு முழுத் திருப்தி தரக் கூடியதுமல்ல.
அவனும் உன் நாட்டவன் தானே, சொந்த நாட்டுக்காரர்கட்குள் சண்டையா? ஆகுமா இந்தச் சகோதரச் சண்டை என்று, கேட்டுப்பார்த்தால் தெரியும்—நாட்டுப் பற்றை, அவன் நையாண்டி செய்வான்.
இதோ பார் என் நாடு என்று காட்டுவான் கல் இடிந்த வீட்டை. அதோ பார் அவனுடைய நாட்டை என்று காட்டுவான் மாளிகையை காட்டிவிட்டுக் கூறுவான், இருவரும் ஒரே நிலப்பரப்பில் இருக்கிறோம், அவ்வளவே தவிர, அவனும் நானும் ஒரே நாட்டுக்காரரல்ல, அவனுடைய நாடு உல்லாசபுரி, என் நாடு உழைத்து அறுக்கும் இடம் என்று கூறுவான், கோபங்கொண்ட ஏழைத் தொழிலாளி.
நெருக்கடியான எவ்வளவோ நேரங்களில் நாட்டுப்பற்று மதப்பற்று முதலியன மங்கிவிடும். விரோத உணர்ச்சியேகூட மூண்டுவிடும்.
தோழமை அஃதல்ல; ஒருவரை ஒருவர் கண்டவுடன் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும்—பயன் கருதி அல்ல—அர்த்தமற்று அல்ல—கண்டதும் களிப்பு—நம்மைப் போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து அந்தக் களிப்பு மலரவேண்டும்.
பேதம் வெறும் மன உணர்ச்சியினால் மட்டுமே ஏற்படுவதல்ல—பேதம் இலாபம் தருகிறது. எனவேதான், அதனை விட்டு