உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


விட மனமில்லை. பேதத்தால் பிழைப்பவர்களுக்கு ஓநாய்க்கு இரத்த பானத்தில் சுவையிருக்குமட்டும் ஜீவகாருண்யத்தை அது எப்படி வரவேற்க முடியும். பேதமும் பல காலமாக இலாபம் தரும் சாதனமாக இருப்பதாலேயே, அதற்குச் ‘சாகாவரம்’ கோருகின்றனர், அதனால் இலாபம் பெறுகிறவர்கள். பேதத்தால் வரும் இலாபம் ஒழிக்கப்பட்டால்தான் தோழமை இருக்கமுடிகிறது.

இந்தத் தோழமைதான், சமத்துவத்தின் கனி, சமதர்ம மணம் இதைக்காணத்தான், ஜாதி தொலைய வேண்டும் என்று பாரதியார் சொன்னார். அவரைப் பாராட்டுபவர்களைப் பார்த்து நாட்டைப் பார்த்து, ஆர்வமிக்க இளைஞர்களைப் பார்த்து,

“இருட்டறையில் உள்ளதடா உலகம்
         ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
         வாயடியம் கையடியும் மறைவதெந்நாள்?
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றைச்
         சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார்தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே இல்லையாயின்
         விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்.”

என்று பாரதிதாசன் கூறுகிறார்.


இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை தந்த திருச்சி வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி.