பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதக் கனி

25

சிவபெருமானைப் போல, பெருமானே, நீ நிலைத்து வாழ்வாயாக! மிகப் பழையதாக நிற்கும் நிலையை உடைய மலைப்பக்கத்துப் பிளப்பிலே தோன்றிய மரத்தில் விளையப் பெற்ற சிறிய இலையையுடைய நெல்லியின் இனியகனியை, இதனால் வரும் நன்மையை நாம் இழத்தல் கூடாது என்று எண்ணாமல், அதன் பெருமையை எனக்கு வெளியிடாமல் அடக்கிக்கொண்டு, சாவு நீங்கும்படி எனக்குத் தந்தாயே! இப்படி யாரால் செய்யமுடியும்?” என்ற பொருளோடு அந்தப் பாட்டுப் பிறந்தது.

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கொன்ற கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்,
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி,
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொல் நிலைப்
பெருமலை விடாகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்குஈந் தனையே![1]

[வலம்-வெற்றி. வாய்-வாய்த்த; குறியைத் தப்பாமல் வெட்டிய. ஒன்னார்-பகைவர். களம்பட-போர்க் களத்தில் அழியும்படி, தொடிவளே-ஆர்கவி-ஆரவாரம். நறவு-கள் முதலிய குடிவகை. போர் அடு-போரிலே எதிர்த்தோரை வஞ்சியாமல் எதிர்நின்று கொல்லும், திரு-செல்வம்; இங்கே வீரத்திரு. பொலந்தார்-பொன்னரி மாலை. புரை-ஒத்த. நுதல் பொலிந்த சென்னி-நெற்றியோடு விளங்கும் தலை; என்றது முன் தலையை. நீலமணி மிடறு-நீலமணி போன்ற நிறமுள்ள கழுத்து. விடரகம்-பிளப்புள்ள இடம். தரு-மரம். ஆதல்-நன்மை. அடக்கி-சொல்லாமல் மறைத்து.]

அதுமுதல் ஔவையாருக்கு அதிகமானிடத்தில் அளவிறந்த மதிப்பும் அன்பும் பெருகின. நரை திரை மூப்பைப் போக்கும் கனியைத் தனக்கென்று வைத்-