பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அதிகமான் நெடுமான் அஞ்சி

தொண்டைமானுடைய படைக்கருவிகளைப் புகழ்வது போல, அவை பயனின்றிக் கிடப்பதைக் குறிப்பிட்டு இகழ்ந்தார்.

“படைக்கலங்களைப் பாதுகாத்து வைப்பதற்கே எவ்வளவோ செலவாகிறது” என்று ஔவையாரின் குறிப்பை உணராமல் மேலும் தொண்டைமான் பேசினான்.

“நீங்கள் பெரிய அரசர். அதனால் இப்படியெல்லாம் அழகு பண்ண முடிகிறது. அதிகமான் சிற்றரசன் தானே? கையிலே இருந்தால் வறியவர்களுக்கு வேண்டியவற்றை வாரி வழங்குவான்; இல்லையானால் தான் உண்ணுவதை அவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வான்.”

அதிகமானுடைய ஈகையையே இந்த மொழிகளால் ஔவையார் புலப்படுத்தினார்.தொண்டைமானோ அதிகமானை வறியன் என்று சொல்வதாக எண்ணிக் கொண்டான். “தங்களுடைய திருவாக்கால் என்னுடைய படைக்கலக் கொட்டிலைச் சிறப்பித்து ஒருபாடல் பாடியருள வேண்டும்” என்று பணிவாக வேண்டினான்.

“அப்படியே செய்கிறேன். அதிகமானுடைய படைக்கல நிலையையும் சேர்த்தே பாடுகிறேன்” என்று தாம் கூறிய கருத்துக்களையெல்லாம் அமைத்து ஒரு பாடலைப் பாடினார் ஔவையார்.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனக சவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்