பக்கம்:அதிசயப் பெண்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏமாற்றம்

17


சீமை சென்றுவந்த குமரன் நிலங்களைப் பார்வையிடச் சென்றான். கடலை விளைந்திருந்த தோட்டத்துக்குப் போனான். “இதோ இது கடலைத் தோட்டம். காய் விளைந்து முற்றிவிட்டது. மகசூல் எடுக்க வேண்டியது. தான்” என்றார் காரியஸ்தர்.

குமரன் வரப்பருகில் உட்கார்ந்துகொண்டான். ஒரு கடலைச் செடியைத் தொட்டுப் பார்த்தான்; புரட்டினான். எதையோ தேடுவதைப் போல இருந்தது. “இந்த ஆசாமிகள் பட்டப்பகலில் கொள்ளேயடிப்பவர்கள் என்பது உண்மை. நாம் ஒன்றையும் கவனிக்க மாட்டோம் என்ற நினைவினால், பொய் சொல்லி ஏமாற்றுகிறான், இந்த மனுஷன். காய் விளந்துவிட்ட தாம்! செடி முழுவதும் ஒரே இலையாக இருக்கிறது. ஒரு காயைக் காணுேம். நமக்கு விஷயம் தெரியாதென்று நினைத்து விட்டானே!"-குமரன் எண்ணம் ஓடியது. கோபம் கனன்றது.

“என்ன ஐயா! ஒரே புளுகாகப் புளுகுகிறீரே. காய் விளைந்துவிட்டதென்று ஏன் பொய் சொல்லுகிறீர்?” என்று படபடப்போடு கேட்டான் சின்ன எஜமானன்.

“விளைந்து விட்டது என்பது பொய்யா? இதோ: அடுத்த வாரத்தில் வெட்டப்போகிறோமே!” .

“என்ன ஐயா! முழு மோசமாக இருக்கிறது. செடியில் ஒரு காயைக் காணோம். நீர் அளக்கிறீரே!”

காரியஸ்தருக்கு உண்மை விளங்கியது. அழுவதா சிரிப்பதா என்று அவருக்கு யோசனை வந்துவிட்டது. ‘எஜமான் செடியைப் புரட்டிப் பார்ப்பதற்குக் காரணம்