பக்கம்:அதிசயப் பெண்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
அதிசயப் பெண்


கரும்பு ஒருமுறை தன் உடம்பைப் பார்த்துக்கொண்டது. “அப்படியானால், இந்தக் கணுவை இனங்கள் விரும்பும்படி ஏதாவது வழி செய்யுங்கள்” என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டது.

கடவுள் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு திருவாய் மலர்ந்தருளினார்.

“ஏ கரும்பே! நீ இனி வருந்தாதே. உனக்குப் பகை உன்னுடைய பழமே ஒழிய, கணு அல்ல. ஆகையால், உனக்குப் பழமே வேண்டாம்” என்றார் கடவுள்.

“அப்படியானால் நான் என்ன ஆவது?” என்று பட படப்புடன் கரும்பு கேட்டது.

“பயப்படாதே. உன் கழிக்கு இன்னும் அதிகச் சுவை உண்டாகும். மனிதர்கள் உன்னே அதிகமாக விரும்புவார்கள்.”

“கணு இருக்கும் அல்லவா?”

“இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிதாக இராது.”

“பழம் இல்லாவிட்டால், விதை இராதே; அப்படியானால் என் வம்சம் எப்படி வளரும்?” என்று மறுபடியும், கவலைகொண்ட கரும்பு கேட்டது.

“என் கட்டிக் கரும்பே! நான் அதை மறந்து விடுவேனா? கணுவுக்குப் பெருமை உண்டாக்க வேண்டுமா? அந்தக் கணுவிலிருந்து கிளம்பும் முளையிலிருந்து உன் வம்சம் விருத்தியாகும். கழியைத் தின்பவர்கள் தின்று