உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசயப் பெண்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38

அதிசயப் பெண்

"போனால் வராத புன்செய்க்கு அடுத்த நன்செய்யிலே,"

"ஓகோ! சுடுகாட்டுக்கு அடுத்த நிலத்திலா?"

“ஆம், ஐயா!" என்று மரியாதையுடன் விடையளித்தாள் அவள். கொஞ்சம் கஞ்சி சாப்பிடுகிறீர்களா?" என்றும் கேட்டாள். -

“சரி” என்று ஒப்புக்கொண்டான் ராஜகுமாரன்.

கஞ்சிச் சட்டியின்மேல் மூடியிருந்த கலயத்தை அவள் எடுத்தாள். அதில் அப்படியே கஞ்சியை ஊற்றுகிறாளா என்று கவனித்தான் ராஜகுமாரன். அதை முதலில் கழுவிவிட்டுப் பிறகு அதில் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள். ராஜகுமாரனுக்குச் சந்தோஷம் உண்டாகிவிட்டது. 'இந்தப் பெண் நமக்கு மனைவியாக வாய்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்' என்ற ஆசை அவனுக்கு அப்போது உண்டாயிற்று.

“உன் விடு எங்கே இருக்கிறது?" என்று கேட்டான்.

"பாலுக்கும் நூலுக்கும் நடுவிலே, சுட்ட கூரையும் சுடாத மதிலும் உள்ள வீடு, எங்கள் வீடு" என்றாள் அவள்.

'பால்காரன் வீட்டுக்கும் தறிகாரன் வீட்டுக்கும் நடுவில், ஒட்டு வில்லை வேய்ந்த வீடு இவள் வீடு. அதைச் சுற்றிச் செடி நிறைந்த வேலி இருக்கும்' என்று உணர்ந்து கொண்டான் இளவரசன்.

அவன் உடனே அவள் வீட்டுக்குப் போய் அவளுடைய தாயோடு பேச்சுக் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/40&oldid=1482989" இலிருந்து மீள்விக்கப்பட்டது