பக்கம்:அதிசயப் பெண்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயப் பெண் 7.

வந்தவன் அருண்டு போனான். சே, சே! இவளும் பெண்ணா பேயா? என்று எண்ணிக் கொண்டு போய் விட்டான்.

திரும்பவும் ஒரு புதிய இளைஞன் வந்தான். வித்தியாதரர் வித்தியாவதியின் சுபாவங்களை வரிசையாக அடுக்கினார். இந்த தடவை மற்றொன்றையும் கூட்டிச் சொன்னார், வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள் என்று சேர்த்துச் சொன்னார். பாவம்! அந்த இளைஞன் ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டான்.

பின்னும் ஒருவன் வந்தபோது வித்தியாதரர், “அவள் இரண்டு மாட்டின் மேல்தான் படுத்துத் தூங்குவாள்” என்பதையும் சேர்த்துச் சொன்னர். அவனும் வந்த வழியே போனான்.

பிறகு யாராவது வந்தால், கடகடவென்று இத்தனையும் ஒருமுறை சொல்வார்.

கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்துவிடுவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்து வைப்பாள். வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள். இரண்டு மாட்டின்மேல் படுத்துத் தூங்குவாள் என்பதை வந்தவர்களிடம் சொல்லுவார். அவர்கள் வேறு ஏதாவது கேட்டால், அவள் சுபாவம் இது! உனக்குப் பிடிக்குமானால் சொல் என்று சொல்வார். வந்தவர்கள் போய்விடுவார்கள்.

இப்படிப் பல மாதங்கள் கழிந்தன. கடைசியில் அறிவும் அழகும் உடைய ஒரு கட்டிளங்காளை வந்தான்.