பக்கம்:அதிசய மின்னணு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ՅՅ அதிசய மின்னணு வேண்டும். குண்டுவீழ்த்தும் விமானத்தில் (bomber). உள்ளோர் அனைவரும் ஒருவரோ டொருவர் பேசும் வசதி பெற்றிருக்கவேண்டும். டாங்கிப் (tank) படையின் தளபதி தன்னுடன் டாங்கிப்படையில் பணியாற்றும் ஏனையோருக்கு அடிக்கடி ஆணைகள் அனுப்பக் கூடிய வசதியுடையவராக இருக்கவேண்டும். விமானங்கள் மூலதளத்துடனும் (base), வான்கலத்துக்கிகளுடனும் (aircraft carriers), கப்பல்களுட னும், பிற விமானங்களுடனும் செய்தித் தொடர்பு கொள்ள வேண்டும். பணியில் ஈடுபட்ட கப்பல்கள் எப்பொழுதும் தம் படம் 53. செய்தித் தொடர்பு கொள்ளல் மொடுதாம் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும். முன்ன தாகச் செல்லும் சாரணப் படையினர் (scout patrols) தம் முடைய தலைமை நிலையத்துடன் தொடர்பு வைத்துக் கொண் டிருத்தல் வேண்டும். - . மேற்குறிப்பிட்ட செய்தித் தொடர்புகள் சாத்தியப்பட வேண்டுமாயின் போர்ப்படையினர் இலட்சக்கணக்கான வானெலியின் அனுப்பும் கருவிகளையும் ஏற்கும் கருவி களையும் பெற்றிருத்தல் வேண்டும். இவை யாவும் மிகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/108&oldid=735074" இலிருந்து மீள்விக்கப்பட்டது